Published:Updated:

ஆயுர்வேத மசாஜ் கேட்ட நெதர்லாந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்... கேரள நபர் கைது!

கைது

பாதிக்கப்பட்ட பெண்மணியின் வழக்கை ஏற்று பிஜூவின் மீது IPC பிரிவு 376-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் கேட்ட நெதர்லாந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்... கேரள நபர் கைது!

பாதிக்கப்பட்ட பெண்மணியின் வழக்கை ஏற்று பிஜூவின் மீது IPC பிரிவு 376-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

Published:Updated:
கைது

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகாரளித்துள்ளார். இந்தப் பெண்மணி இந்தியாவைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். இவர்கள் மார்ச் 12-ம் தேதி டெல்லி வந்துள்ளனர்.

சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரிலுள்ள சிந்தி கேம்ப் பகுதியில் இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இந்நிலையில் ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்வதற்காக பிஜூ முரளிதரன் என்ற நபரை அழைத்துள்ளனர். அவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி அந்தப் பெண்மணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்மணியின் புகாரின்படி இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பிஜூ முரளிதரன் கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்டவர். இவர் ஜெய்ப்பூரின் கத்திபுரா என்ற பகுதியில் வசித்துவந்தார். இவர் ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்வதை வேலையாகச் செய்துவந்தவர்.

பாலியல்  வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட பெண்மணியின் வழக்கை ஏற்று பிஜூவின் மீது IPC பிரிவு 376-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை வழக்கு பதிந்ததோடு, குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

அந்தப் பெண்ணிடம் மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டதோடு, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக சிந்தி கேம்ப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.