Published:Updated:

`பால் வாங்கச் சென்ற டீக்கடைக்காரர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!’ - மதுரை அதிர்ச்சி

கொலை
கொலை ( Representational Image )

`குடும்பத் தகறாரா... தனிப்பட்ட பகையா?’ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

தேநீர் கடை வியாபாரத்துக்குப் பால் வாங்கச் சென்றவர், ஒரு கும்பலால் வழிமறித்து, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரை மக்களைக் கலங்கவைத்திருக்கிறது. சமீபகாலமாக மதுரையில் கொலை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

கொலை செய்யப்பட்ட முருகன்
கொலை செய்யப்பட்ட முருகன்

மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் தேநீர்க்கடை நடத்திவருகிறார் முருகன். இன்று அதிகாலை கடை வியாபாரத்துக்குத் தேவையான பால் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் புதூர் அருகேயுள்ள சூர்யாநகருக்குச் சென்றுகொண்டிருந்தார்.

வழியில் தனியார் பள்ளியருகே நின்றுகொண்டிருந்த மர்மக் கும்பல் ஒன்று முருகனின் வாகனத்தை மறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. என்ன நடக்கிறது என்பது புரியாமல் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சாலையில் ஓடிய முருகனை, ஓட ஓட விரட்டி தலையைத் துண்டித்து கொலை செய்தது அந்தக் கும்பல். காலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிரவைத்திருக்கிறது.

முருகன்
முருகன்

கொலைச் சம்பவம் பற்றித் தகவலறிந்து, தல்லாகுளம் காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தினர். அதன் பிறகு முருகன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

`குடும்பத் தகறாரா... தனிப்பட்ட பகையா?’ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

கொலை
கொலை
Representational Image

ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியில் ஓட ஓட விரட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபநாள்களாக கொலை, திருட்டு என்று குற்றச் செயல்கள் மதுரையில் அதிகரித்துவருவதால், பொதுமக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு