Published:Updated:

ராஜஸ்தான்: பூசாரி குடும்பத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்; 8 பேர் கைது; தொடரும் விசாரணை!

பெட்ரோல் குண்டு ( சித்திரிப்புப் படம் )

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தத் தம்பதியரின் கடைக்குள் இரவு நேரத்தில் புகுந்த 10, 12 பேர் அடங்கிய கும்பல், தம்பதியர்மீது பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கிறது.

ராஜஸ்தான்: பூசாரி குடும்பத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்; 8 பேர் கைது; தொடரும் விசாரணை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தத் தம்பதியரின் கடைக்குள் இரவு நேரத்தில் புகுந்த 10, 12 பேர் அடங்கிய கும்பல், தம்பதியர்மீது பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கிறது.

Published:Updated:
பெட்ரோல் குண்டு ( சித்திரிப்புப் படம் )

ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் மாவட்டத்தில் வசிப்பவர் நவரத்னா லால் (75). பூசாரியான இவரின் மனைவி பெயர் ஜம்னா தேவி (60). இவர்கள் அதே பகுதியில் கடை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தத் தம்பதியரின் கடைக்குள் இரவு நேரத்தில் புகுந்த 10, 12 பேர் அடங்கிய கும்பல், தம்பதியர்மீது பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கிறது. இதில் பலத்த காயமடைந்த தம்பதியர், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.

பெட்ரோல் குண்டு
பெட்ரோல் குண்டு
சித்திரிப்புப் படம்

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் எட்டுப் பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. மேலும் இது சொத்துத் தகராறு தொடர்பான வழக்காக இருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

காவல்துறை
காவல்துறை

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட நவரத்னா லாலின் மகன் முகேஷ் பிரஜாபத், "நாங்கள் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கடைமீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. அப்போது என்னுடைய பெற்றோரின் ஆடைகளில் தீப்பிடித்தது. உடனே ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்குத் தகவலளித்தோம்.

ஆனால் அதற்குள் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்தத் தீயை அணைத்துவிட்டோம். மேலும், இந்தத் தாக்குதல் குறித்து ஏற்கெனவே அவுட்போஸ்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று காவல்துறை மீது குற்றம்சாட்டியிருக்கிறார்.