Published:Updated:

தருமபுரி: பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு... செவிலியர், தரகர் உட்பட 8 பேர் கைது!

கருக்கலைப்பு

தருமபுரியில் சட்ட விரோதமாகக் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த செவிலியர், அவரின் கணவர், இடைத்தரகர் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி: பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு... செவிலியர், தரகர் உட்பட 8 பேர் கைது!

தருமபுரியில் சட்ட விரோதமாகக் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த செவிலியர், அவரின் கணவர், இடைத்தரகர் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
கருக்கலைப்பு

தருமபுரி அருகிலுள்ள செட்டிக்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்யப்படுவதாக, அந்த மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து அந்தப் பகுதி காவல்துறையினர் உதவியுடன், மருத்துவத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தப் பகுதியில் சிலர் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துவருவது தெரியவந்தது.

கருக்கலைப்பு -  கைது செய்யப்பட்டவர்கள்
கருக்கலைப்பு - கைது செய்யப்பட்டவர்கள்

விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் அந்தப் பகுதியில் ஸ்கேன் இயந்திரம் வைத்திருந்த சதீஷ்குமார், சுதாகர், செவிலியர் கற்பகம், இடைத்தரகர் ஜோதி, குமார், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோதமாகக் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து அவற்றைக் கருக்கலைப்பு செய்துவந்தது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கேன் இயந்திரம்
ஸ்கேன் இயந்திரம்

இந்தச் சட்டவிரோதச் செயலில் தொடர்புடைய இன்னும் சிலரையும் காவல்துறையினர் தேடிவந்தனர். அவர்களில் செவிலியர் கற்பகத்தின் கணவர் விஜயகுமார் இன்று கைதுசெய்யப்பட்டார். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism