Published:Updated:

சென்னை: பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த எலெக்ட்ரீஷியனுக்கு நள்ளிரவில் நடந்த சோகம்!

கொலை ( மாதிரிப் படம் )

பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரைக் கட்டையால் தாக்கி கொலைசெய்தவரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை: பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த எலெக்ட்ரீஷியனுக்கு நள்ளிரவில் நடந்த சோகம்!

பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரைக் கட்டையால் தாக்கி கொலைசெய்தவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை ( மாதிரிப் படம் )

சென்னை வடபழனி 100 அடி சாலையிலுள்ள கடை அருகில் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்துகிடந்தார். இது குறித்து வடபழனி காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் ஜேம்ஸ் வேதஜார்ஜ் என்பது தெரியவந்தது. இவர் எலெக்ட்ரீஷியனாக வேலைபார்த்துவந்தார். இவரின் மகள் சூளைமேட்டில் வசித்துவருகிறார். அடிக்கடி அங்கு செல்லும் ஜேம்ஸ் வேதஜார்ஜ், மற்ற வேளைகளில் பிளாட்பாரத்தில் தங்கியிருந்துவந்தார்.

கொலை வழக்கில் கைதான ராஜ்குமார்
கொலை வழக்கில் கைதான ராஜ்குமார்

ஜேம்ஸ் வேதஜார்ஜ் மரணம் குறித்து விசாரித்தபோது அவர் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளையும் போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது 13.1.2023-ம் தேதி நள்ளிரவில் பிளாட்பாரத்தில் வசித்துவரும் ராஜ்குமார் என்பவர் மது அருந்தியிருக்கிறார். போதையிலிருந்த ராஜ்குமாருக்கும், ஜேம்ஸ் வேதஜார்ஜுக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த ராஜ்குமார், அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால், தூங்கிக்கொண்டிருந்த ஜேம்ஸ் வேதஜார்ஜைத் தாக்கியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜேம்ஸ் வேதஜார்ஜ் உயிரிழந்திருக்கிறார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், ராஜ்குமாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.