Published:Updated:

சென்னை: தடகளப் பயிற்சி அளிப்பதாக 13 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை - எலெக்ட்ரீஷியன் கைது

பாலியல் தொல்லை

சென்னையில் தடகளப் பயிற்சி அளிப்பதாகக் கூறி, சிறுவனுக்கும் அவனின் நண்பர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் எலெக்ட்ரீஷியன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவன், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பகுதியிலுள்ள மைதானத்துக்கு விளையாடச் செல்வது வழக்கம். அப்போது தடகளப் பயிற்சி அளிப்பதாகக் கூறி மணப்பாக்கத்தைச் சேர்ந்த கோபிகண்ணன் (32) என்பவர் சிறுவனிடமும் அவனின் நண்பர்களிடமும் அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு கோபி கண்ணன், பயிற்சி என்ற பெயரில் சிறுவன், அவனுடைய நண்பர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன், தன்னுடைய தந்தையிடம் விவரத்தைக் கூறினார்.

கைது
கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து கோபிகண்ணன் மீது எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் சிறுவன் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கோபிகண்ணனிடம் விசாரணை நடத்தினர். சிறுவன் அளித்த தகவலின்படி கோபிகண்ணன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கைதான கோபிகண்ணனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம். இவர் சென்னையில் எலெக்ட்ரீஷியனாக வேலை செய்துவருகிறார். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.