Published:Updated:

சென்னை: திருமணமான ஒன்றரை மாதத்தில் எலெக்ட்ரிஷியன் எடுத்த விபரீத முடிவு!

எலெக்ட்ரிஷியன் தற்கொலை
எலெக்ட்ரிஷியன் தற்கொலை ( representational image )

சென்னை திருநின்றவூரில் திருமணமான ஒன்றரை மாதத்தில் எலெக்ட்ரிஷியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் சுரேஷ் (23). இவர், எலெக்ட்ரிஷியனாக வேலை பார்த்துவந்தார். வேலூர், வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா (21). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சந்தோஷமாக இல்லற வாழ்க்கையை இருவரும் தொடங்கினர்.

திருமணம்
திருமணம்

இந்தநிலையில் சுரேஷ் குடியிருந்தது சிறிய வீடு. அதனால் இந்த வீட்டில் வசதிகள் குறைவாக இருந்ததால், தனிக்குடித்தனம் செல்லலாம் எனக் கணவர் சுரேஷிடம் நர்மதா கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு சுரேஷ் சம்மதிக்கவில்லை. அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய நர்மதா, பட்டாபிராமிலுள்ள உறவினர் வீட்டில் தங்கினார்.

அவரை வீட்டுக்கு வரும்படி சுரேஷ் பல தடவை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் சுரேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இருப்பினும் அவர் வேலைக்குச் சென்றுவந்தார். இந்தநிலையில், வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று மாலை சுரேஷ் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்ற அவர் கதவைப் பூட்டிக்கொண்டார். நீண்டநேரமாக கதவைத் திறக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்து வீட்டிலுள்ளவர்கள் கதவைத் தட்டினர். ஆனால் சுரேஷ் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது, சுரேஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது.

சென்னை: `காலையில் பெண் பார்க்கும் படலம்; இரவில் தற்கொலை' - பெண் இன்ஜினீயரின் விபரீத முடிவு
தற்கொலை
தற்கொலை
Representational Image

அதைப் பார்த்து அவரின் அம்மா செல்வி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து திருநின்றவூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சுரேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுரேஷ், தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். போலீஸ் விசாரணைக்குப் பின்னர் உண்மையான காரணம் தெரிய வரும்.

அடுத்த கட்டுரைக்கு