Published:Updated:

`மூன்றடியில் இரண்டு தந்தங்கள்!' -கேரள வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர்

பறிமுதல் செய்யப்பட்ட தந்தம்
பறிமுதல் செய்யப்பட்ட தந்தம்

கேரள மாநிலம் வயநாட்டில் யானைத் தந்தங்களைப் பதுக்கிய, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொள்ளாயிரம் காடிமட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாகக் கேரள வனத்துறையினருக்குக் கடந்த 26-ம் தேதி தகவல் வந்தது.

ஆண் யானை
ஆண் யானை

மேப்பாடி வனச்சரகருடன் வனத்துறையினர் வந்து பார்த்தபோது யானையின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்தவுடன், `தந்த வேட்டைக் கும்பலின் கைவரிசைதான் இது' என்பதை உறுதி செய்தனர்.

நல்ல வளர்ச்சியில் இருந்த ஆண் யானையின் உடலிலிருந்து தந்தங்களை வெட்டி எடுத்துச்சென்றதும் தெரியவந்தது.

தந்தம், தோல், ரோமம், நகம்... எல்லாமே கோடிகள்! - யானைக் கடத்தல் பயங்கரம் #ExtricateElephants

வன அலுவலர் ரஞ்சித்குமார், வனச்சரகர் பாபுராஜ், மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் இடுக்கி மாவட்டம், பைசன்வேலி மவுண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பீர்முகம்மது பாட்ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்றுபேர் இணைந்து யானையின் தந்தங்களை வெட்டி எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, பீர்முகம்மது பாட்ஷாவைக் கைது செய்தனர்.

தந்தம்
தந்தம்

தந்தங்கள் கடத்தப்பட்டது குறித்து கேரள வனத்துறையினர் கூறுகையில், ``இடுக்கிப் பகுதியில் பஞ்சாயத்து தலைவராக 2015-ம் ஆண்டு பதவி வகித்தவர் பீர்முகம்மது பாட்ஷா. இவரும் இவரது கூட்டாளிகள் மூன்று பேரும் இணைந்து யானையின் உடலிலிருந்து தந்தங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இவரை கைது செய்ததோடு இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள நிலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட இதில் தொடர்புடைய சிலரைத் தேடி வருகிறோம்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு