Published:Updated:

ஒரே தவணையில் 286 மாதச் சம்பளம்... தவறுதலாக அனுப்பிய நிறுவனம்; தலைமறைவான ஊழியர் - என்ன நடந்தது?

பணம்

ஊழியரின் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாக அந்த நிறுவனம் செலுத்திய தொகை இந்திய மதிப்பில் 1.42 கோடி ரூபாய். ஆனால், அவரின் மாத சம்பளம் ரூ.40,000-தான்.

ஒரே தவணையில் 286 மாதச் சம்பளம்... தவறுதலாக அனுப்பிய நிறுவனம்; தலைமறைவான ஊழியர் - என்ன நடந்தது?

ஊழியரின் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாக அந்த நிறுவனம் செலுத்திய தொகை இந்திய மதிப்பில் 1.42 கோடி ரூபாய். ஆனால், அவரின் மாத சம்பளம் ரூ.40,000-தான்.

Published:Updated:
பணம்

சிலி நாட்டைத் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு வழக்கம்போல் வங்கியின் வழியாகச் சம்பளப் பணத்தை வழங்கியிருக்கிறது. சில நேரங்களில் ஒரு மாதச் சம்பளத்துக்கு இரண்டு மாதச் சம்பளம், மூன்று மாதச் சம்பளம் எனத் தவறுதலாக நிறுவனம் செலுத்திவிடும். ஊழியர்களும் விவரம் தெரிந்ததும் அல்லது நிறுவனம் விளக்கம் அளித்துக் கேட்கும்போது அதை நிறுவனத்திடம் மீண்டும் ஒப்படைத்துவிடுவார்கள். சில நேரங்களில் குறைவான சம்பளம் வருவதும் நடக்கும்.

மோசடி
மோசடி

ஆனால் சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தன் ஊழியர் ஒருவருக்கு 286 மாதச் சம்பளத்தைத் தவறுதலாக ஒரே தவணையாகச் செலுத்தியிருக்கிறது. அந்த ஊழியருக்கு மாதச் சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.40,000. அவரின் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாக அந்த நிறுவனம் செலுத்திய தொகை 1.42 கோடி ரூபாய். நடந்த தவற்றை உணர்ந்த அந்த நிறுவனம் உடனே அந்த ஊழியரைத் தொடர்புகொண்டு கூறியிருக்கிறது. உடனே அந்த ஊழியரும் இதோ வங்கிக்குச் சென்று பணத்தைத் திருப்பி அனுப்பிவிடுகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிறுவனமும் அவர்களது பணம் வந்துவிடும் என்று காத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு வங்கியிலிருந்து பணம் வருவதற்கான குறுஞ்செய்திகளும் வரவில்லை. பணம் எடுக்கச் சென்றவரும் வரவில்லை. அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அந்த நபர் பதிலளிக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த நபர் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, தான் உறங்கிவிட்டதாகவும், இனிமேல்தான் வங்கிக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

மோசடி
மோசடி
சித்தரிப்புப் படம்

ஆனால், கடந்த ஜூன் 2-ம் தேதி, தான் வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறிவிட்டு, நிறுவனம் தவறுதலாகக் கொடுத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாராம். தற்போது அவர்மீது வழக்கு பதிவுசெய்து போலீஸ் மூலம் தேடிவருகிறதாம் அந்த நிறுவனம்!