Published:Updated:

சேலம்: ஆன்லைன் விளையாட்டு; 12 ஆண்டுகள் பணியாற்றிய நகைக்கடையிலேயே திருடிய ஊழியர்! - சிக்கியது எப்படி?

நகைக்கடையில் திருட்டு

``குறைந்த வருமானத்தால் எனது குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வேறு சைடு பிஸினஸ் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி, ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தேன்.”

சேலம்: ஆன்லைன் விளையாட்டு; 12 ஆண்டுகள் பணியாற்றிய நகைக்கடையிலேயே திருடிய ஊழியர்! - சிக்கியது எப்படி?

``குறைந்த வருமானத்தால் எனது குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வேறு சைடு பிஸினஸ் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி, ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தேன்.”

Published:Updated:
நகைக்கடையில் திருட்டு

சேலம், புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது ஏ.வி.ஆர் சொர்ணமகால் எனும் பிரபல நகைக்கடை. இந்தக் கடையின் பெயரில் சேலத்தில் பல்வேறு கிளைகள் இயங்கிவருகின்றன. இதில், நேற்று (28-ம் தேதி) பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல்போனதாகக் கூறி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நகைக்கடைச் செய்தித் தொடர்பாளர் லெட்சுமணன் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் ராணி புகாரை ஏற்று வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினார்.

அதில், அதே நகைக்கடையில் 12 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றும் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தனக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாகவும், கடந்த 12 வருடங்களாக நகைக்கடையில் வேலை பார்த்துவந்ததும், அதன் பிறகு மேனஜராகப் பணியாற்றியதாகவும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நீண்ட நாள்கள் விடுப்பு எடுத்ததால் தன்னை மேனேஜர் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு, சாதாரண சேல்ஸ்மேனாகப் பணியில் அமர்த்தியதாகவும் கூறினார். இதனால் தன்னுடைய சம்பளம் முன்னர் இருந்ததைவிடவும் மிகவும் குறைவாகக் கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார்.

தீபக்
தீபக்

தொடர்ந்து, ``குறைந்த வருமானத்தால் எனது குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சைடு பிஸினஸ் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி, ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தேன். அதில், ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில் முதலில் விளையாட 5,000 பணம் கட்டி ஆரம்பித்தேன். அதில், எனக்கு சிறு லாபம் கிடைத்துவந்தது.

 அந்த ஆசையில் நானும் கையில் இருந்த பணத்தைக் கட்டி விளையாட ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் கையில் இருந்த பணமெல்லாம் போய்விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விட்ட பணத்தை எப்படியாவது திரும்பப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் வேலை செய்யும் கடையில், சூப்பர்வைசர் வார விடுப்பில் சென்றபோது, தாலி செயின்களை எடுத்து அதிலுள்ள குண்டுகளைத் தனியாக எடுத்து அதை வெளியிலுள்ள தனியார் வங்கியில் விற்று விளையாடினேன்” என்றிருக்கிறார்.

சேலம்: ஆன்லைன் விளையாட்டு; 12 ஆண்டுகள் பணியாற்றிய நகைக்கடையிலேயே திருடிய ஊழியர்! - சிக்கியது எப்படி?

மேலும் போலீஸாரின் விசாரணையில் 145 சவரன் நகையை திருடியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால், கைதுசெய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நகைக்கடையின் நகைகளை மீட்க போலீஸார் கோர்ட் மூலம் முறையான நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், மேலும் திருட்டு நகைகளை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகள் விலைக்கு எடுத்துக்கொண்டன என்கிற விசாரணையை மேற்கொள்விருப்பதாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்.