Published:Updated:

இந்தோனேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி வெற்றிலைப் பாக்கு பறிமுதல்!

ஜஸ்பிர் சிங்

சோதனையில் 289 மெட்ரிக் டன் வெற்றிலைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11.5 கோடியாகும். நாக்பூர் வியாபாரிகள் சிலர் அரசு அதிகாரிகளை தங்களது கையிக்குள் போட்டுக்கொண்டு இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த வெற்றிலைப் பாக்கை இறக்குமதி செய்து வந்தனர்.

இந்தோனேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி வெற்றிலைப் பாக்கு பறிமுதல்!

சோதனையில் 289 மெட்ரிக் டன் வெற்றிலைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11.5 கோடியாகும். நாக்பூர் வியாபாரிகள் சிலர் அரசு அதிகாரிகளை தங்களது கையிக்குள் போட்டுக்கொண்டு இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த வெற்றிலைப் பாக்கை இறக்குமதி செய்து வந்தனர்.

Published:Updated:
ஜஸ்பிர் சிங்

இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த வெற்றிலைப் பாக்கு மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுவதாக புகார் இருந்து வந்தது. இக்கடத்தல் நீண்ட நாள்களாக ஈடுபட்டு வந்த ஜஸ்பிர் சிங் என்பவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு அஸ்ஸாமில் கைது செய்யப்பட்டான். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த அவனை கைது செய்ய அஸ்ஸாம் போலீஸார் கடந்த ஓர் ஆண்டாக மகாராஷ்டிரா, டெல்லி, இமாசலப் பிரதேசத்தில் பல முறை முயற்சி செய்து தோல்வியை சந்தித்த நிலையில் இப்போது கைது செய்யப்பட்டான்.

இந்தோனேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி வெற்றிலைப் பாக்கு பறிமுதல்!

இவனது முக்கிய தொழிலே இந்தோனேசியாவில் இருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்கு தரம் குறைந்த வெற்றிலைப் பாக்கை கடத்தி வருவதாகும். கைது செய்யப்பட்ட சிங்கிடமும், அவனது கூட்டாளிகள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தியத்தைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நாக்பூர், மும்பையில் இரண்டு நாள்கள் வெற்றிலைப் பாக்கு வியாபாரிகளின் குடோன்கள், வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இச்சோதனையில் 289 மெட்ரிக் டன் வெற்றிலைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11.5 கோடியாகும். நாக்பூர் வியாபாரிகள் சிலர் அரசு அதிகாரிகளை தங்களது கையிக்குள் போட்டுக்கொண்டு இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த வெற்றிலை பாக்கை இறக்குமதி செய்து வந்தனர். அவற்றை நாக்பூர், மும்பை மற்றும் மத்திய இந்தியா பகுதியில் விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். இந்தோனேசியாவில் இருந்து வெற்றிலைப் பாக்கை இறக்குமதி செய்ய போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். இந்தியா தெற்காசியாவில் உள்ள நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கிறது.

வெற்றிலைப்பாக்கு பறிமுதல்
வெற்றிலைப்பாக்கு பறிமுதல்

அவ்வாறு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்ட நாடுகளில் இருந்து வெற்றிலைப் பாக்கு இறக்குமதி செய்வதாக போலி ஆவணங்கள் தயாரித்து, அவற்றின் விலையைக் குறைவாக மதிப்பிட்டு இந்தோனேசியாவில் இருந்து வெற்றிலைப் பாக்குகளை நாக்பூர் வியாபாரிகள் இறக்குமதி செய்கின்றனர். இதற்கு அதிகாரிகள் சிலரும் துணைபோவதாகக் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது தொடர்பாக 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ நாக்பூரில் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்தோனேசியாவில் இருந்து வரி இல்லாமல் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இக்கடத்தலில் கமிஷன் ஏஜென்டுகள், ஹவாலா ஆபரேட்டர்களும் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.