Published:Updated:

சுகேஷ் வழக்கு: ஜாக்குலின், நோராவிடம் ஆடம்பரப் பரிசுப்பொருள்களைப் பறிமுதல் செய்யும் அமலாக்கப் பிரிவு!

ஜாக்குலின், நோரா
News
ஜாக்குலின், நோரா

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இரண்டு நடிகைகளுக்கும் சுகேஷ் கொடுத்த பரிசுப்பொருள்களைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்திருக்கின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரை ஜாமீனில் வெளியில் எடுப்பதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் ரூ.200 கோடியை தொழிலதிபரின் மனைவியிடமிருந்து மிரட்டிப் பறித்திருக்கிறார். அப்படி மிரட்டிப் பறித்த பணத்தை, சுகேஷ் நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்குச் செலவு செய்திருக்கிறார். ஜாக்குலினிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அவரின் மேக்கப் கலைஞருக்குக்கூட சுகேஷ் பணத்தை வாரியிறைத்தது, அமலாக்கப் பிரிவின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சுகேஷ் சிறையிலிருந்து சில மாதங்கள் ஜாமீனில் வந்திருந்தபோது, தான் மிரட்டிச் சம்பாதித்த ரூ.200 கோடியை நடிகைகளுக்குத் தண்ணீராக செலவு செய்திருக்கிறார். சுகேஷின் செயல்பாடுகள் அதிக அளவில் டெல்லியிலிருந்தாலும், சென்னையில் அதிக நேரம் செலவழிப்பதை வாடிக்கையாகக்கொண்டிருந்தார். எனவேதான் பாலிவுட் நடிகைகளைச் சென்னைக்கு வரவழைத்திருக்கிறார்.

நடிகைகள் ஜாக்குலின், நோராவுக்கு ஏராளமான பரிசுப்பொருள்களை சுகேஷ் கொடுத்திருக்கிறார். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இரண்டு நடிகைகளிடமும் பலமுறை விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் சுகேஷிடமிருந்து பரிசுப்பொருள்கள் வாங்கியதை ஒப்புக்கொண்டனர். ஜாக்குலினுக்கு தங்க வைர ஆபரணங்கள், ஆடம்பர பேக், பல லட்சம் மதிப்புள்ள பூனைக்குட்டி, குதிரை என ஏராளமானவற்றை சுகேஷ் அளித்திருக்கிறார். ஜாக்குலின் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அவரின் சகோதரிக்கு ரூ.1.5 லட்சம் அமெரிக்க டாலர் கடன் கொடுத்ததோடு, ஜாக்குலினின் தாயாருக்கும் பரிசுகளை வாரி வழங்கி தனக்குச் சாதகமாக நடக்கும்படி பார்த்துக்கொண்டதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜாக்குலின், நோரா
ஜாக்குலின், நோரா

ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்குப் பரிசுப்பொருள்கள் கொடுத்திருக்கிறார். அதில் ரூ.7 கோடிக்கு தங்க மற்றும் வைர ஆபரணங்களை வாங்கிக்கொடுத்திருக்கிறார். நடிகை நோராவுக்கு பி.எம்.டபிள்யூ கார் மற்றும் ஆபரணங்கள் கொடுத்திருக்கிறார். அமலாக்கப் பிரிவின் விசாரணையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காகத்தான் சுகேஷ் தனக்கு கார் மற்றும் பரிசுப்பொருள்கள் கொடுத்ததாகவும், அவற்றைத் திரும்ப கொடுத்துவிட தான் தயாராக இருப்பதாகவும் நோரா தெரிவித்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுகேஷ் சந்திரசேகர்
சுகேஷ் சந்திரசேகர்

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இரண்டு நடிகைகளுக்கும் சுகேஷ் கொடுத்த பரிசுப்பொருள்களைப் பறிமுதல் செய்ய முடிவு செய்திருக்கின்றனர். ஜாக்குலின் ஹோட்டலில் தங்குவதற்கு, உணவுக்கு மற்றும் தனி விமானத்தை பயன்படுத்திய செலவுத் தொகையை ஜாக்குலினிடமிருந்து வசூலிக்கவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் இரண்டு நடிகைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். நடிகை நோரா அமலாக்கப் பிரிவின் சாட்சியாக மாற சம்மதம் தெரிவித்திருக்கிறார்.