Published:Updated:

ஓடிபி தகராறு; மனைவி கண்முன் ஐடி நிறுவன ஊழியர் கொலை - கால் டாக்ஸி டிரைவர் கைது!

கொலை

மனைவி, குழந்தைகள் கண்முன், ஐடி நிறுவன ஊழியர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓடிபி தகராறு; மனைவி கண்முன் ஐடி நிறுவன ஊழியர் கொலை - கால் டாக்ஸி டிரைவர் கைது!

மனைவி, குழந்தைகள் கண்முன், ஐடி நிறுவன ஊழியர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் கிராமம், குந்தன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர் (33). இவர், கோயம்புத்தூரில் ஐடி நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்துவந்தார். வார விடுமுறையையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை (1-ம் தேதி) இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை கன்னிவாக்கத்திலுள்ள வீட்டுக்கு வந்திருக்கிறார். ஞாயிற்றுகிழமையன்று சினிமா பார்ப்பதற்காக கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு உமேந்தர், அவரின் மனைவி பவ்யா (30), குழந்தைகள் அக்ரேஷ், கருண், பவ்யாவின் சகோதரி தேவிப்பிரியா, அவரின் இரண்டு குழந்தைகள் என ஏழு பேர் கால் டாக்ஸியில் வந்தனர்.

 டாக்ஸி
டாக்ஸி

பின்னர், சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்ப பாவ்யாவின் சகோதரி தேவிப் பிரியா, தன்னுடைய செல்போனிலிருந்து கால் டாக்ஸி புக் செய்தார். சிறிது நேரத்தில் இன்னோவா கார் வந்ததும் அனைவரும் காரில் ஏறியிருக்கின்றனர். கால் டாக்ஸி டிரைவர் ரவி, ஜடி நிறுவன ஊழியர் உமேந்தரிடம் ஓ.டி.பி நம்பரைக் கேட்டிருக்கிறார். அப்போது ஓ.டி.பி நம்பர் கூறுவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் டிரைவர் ரவிக்கும் உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் அனைவரையும் காரைவிட்டு இறங்கும்படி டிரைவர் ரவி கூறியிருக்கிறார். அதற்கு உமேந்தர், காரைவிட்டு இறங்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் டிரைவருக்கும், உமேந்தர் குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காரைவிட்டு இறங்கிய உமேந்தர், காரின் கதவை வேகமாக மூடியிருக்கிறார். அதனால், எப்படிக் கதவை வேகமாக மூடலாம் என உமேந்தரிடம் டிரைவர் ரவி சண்டை போட்டிருக்கிறார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் உமேந்தர் மயக்கமடைந்தார். பின்னர் அவரைக் குடும்பத்தினரும், பொதுமக்களும் மீட்டு கேளம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உமேந்திரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

டிரைவர் ரவி
டிரைவர் ரவி

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உமேந்தரின் குடும்பத்தினர், கால் டாக்ஸி டிரைவர் ரவிமீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர் தமிழன்பன், போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றனர். பின்னர் கால் டாக்ஸி டிரைவர் ரவியைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் ரவியின் சொந்த ஊர் சேலம் ஆத்தூர், வ.உ.சி நகர் எனத் தெரியவந்தது. உமேந்தர் கொலை குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு ரவியைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.