Published:Updated:

மாங்காடு: பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்; இன்ஜினீயரிங் மாணவன் போக்சோவில் கைது!

இன்ஜினீயரிங் மாணவன் விக்கி
News
இன்ஜினீயரிங் மாணவன் விக்கி

சென்னை மாங்காடு பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக மனவிரக்தியடைந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் இன்ஜினீயரிங் மாணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய தற்கொலை கடிதத்தில், ``உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான். அம்மா போயிட்டு வரேன்..!'' என்று குறிப்பிட்டிருந்தார். மாணவி எழுதிய கடிதம், அவரின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தற்கொலை
தற்கொலை

இதுகுறித்து மாங்காடு போலீஸார் கூறுகையில், ``மாணவி பயன்படுத்திய செல்போனுக்கு வந்த மெசேஜ்கள், அழைப்புகள் அடிப்படையில் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மாங்காடு பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (20) என்ற மாணவனும், அந்த மாணவியும் அடிக்கடி பேசி வந்த தகவல் தெரியவந்தது. அதனால் விக்கியிடம் விசாரித்தோம். விசாரணையில் அவர், குன்றத்தூர் பகுதியிலிருக்கும் இன்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். விக்கியும் மாணவியும் பழகி வந்த சூழலில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைது
கைது

அதனால் மாணவிக்கு விக்கி ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். அதன்காரணமாக விரக்தியடைந்த மாணவி, இந்த விபரீத முடிவை எடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதனால் இந்த வழக்கு பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸார் விக்கி மீது பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்கி, செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" என்றனர்.