Published:Updated:

ஈரோடு: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்! - போக்சோவில் கைதுசெய்த போலீஸ்

போக்சோ ( representational image )

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் (மொடக்குறிச்சி) போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கவின்ராஜை கைதுசெய்தனர்.

ஈரோடு: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்! - போக்சோவில் கைதுசெய்த போலீஸ்

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் (மொடக்குறிச்சி) போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கவின்ராஜை கைதுசெய்தனர்.

Published:Updated:
போக்சோ ( representational image )

ஈரோடு மாவட்டம், முத்துகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் கவின்ராஜ். கறிக்கடையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், செல்போன் மூலம் கவின்ராஜுக்கும் மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அடிக்கடி அந்த மாணவியுடன் செல்போனில் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட கவின்ராஜ் அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதன் காரணமாக கல்லூரி மாணவி கர்ப்பமானார்.

கைது
கைது

தற்போது அந்த மாணவி நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த மாணவியை கடத்திச் சென்ற கவின்ராஜ் ஈரோட்டில் வைத்து திருமணமும் செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் (மொடக்குறிச்சி) போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கவின்ராஜை கைதுசெய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.