Published:Updated:

`மீண்டும் காதலி; படங்களைக் கணவனுக்கு அனுப்பிவிடுவேன்' -முன்னாள் காதலன் மிரட்டலால் விஷம் குடித்த பெண்

விஷம்

பானுவின் செல்போன் நம்பருக்கு, அவர்கள் இருவரும் தனியாக இருந்த புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`மீண்டும் காதலி; படங்களைக் கணவனுக்கு அனுப்பிவிடுவேன்' -முன்னாள் காதலன் மிரட்டலால் விஷம் குடித்த பெண்

பானுவின் செல்போன் நம்பருக்கு, அவர்கள் இருவரும் தனியாக இருந்த புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
விஷம்

``உன் கணவருக்குத் தெரியாமல் மீண்டும் என்னைக் காதலி. இல்லையென்றால், நாம் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உன் கணவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புவேன்" என்று மிரட்டியதால், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள மான்பிடி மங்கலத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தபோது, வயலூர் பகுதியைச் சேர்ந்த பானு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்கிற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது, காதலாக மாறியிருக்கிறது. இருவரும் காதலர்களாகச் சுற்றியதாகச் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் மகாதேவன் நடத்தையில் சந்தேகம் ஏற்பட, காதலை மறந்து, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை அந்தப் பெண் திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதற்கிடையில் மகாதேவனுக்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து மணப்பாறை பகுதியில் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டிவருகிறார்.

திருச்சி அரசு பொது மருத்துவமனை
திருச்சி அரசு பொது மருத்துவமனை

இந்நிலையில், பானு தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே ஒருவர் உடல்நிலை சரியில்லை என்று போன் வந்ததும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறாார் மகாதேவன். அங்குதான் பானுவை மீண்டும் பார்த்திருக்கிறார். பழைய காதலியைச் சந்தித்ததும் மீண்டும் அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார். அப்போது அவர் பேச மறுக்க, "உன் கணவருக்குத் தெரியாமல் மீண்டும் என்னைக் காதலிக்க வேண்டும். இல்லையென்றால், நாம் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை என்னோட போன்லவெச்சுருக்கேன். அதை உன் புருஷனோட வாட்ஸ்அப்புக்கு அனுப்புவேன்" என்று மிரட்டியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, ``எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம்" என்று அந்தப் பெண் கெஞ்சியிருக்கிறார். ஆனாலும், மகாதேவன் நிறுத்தவில்லை. கடந்த 20-ம் தேதி பானுவின் செல்போன் நம்பருக்கு அவர்கள் இருவரும் தனியாக இருந்த புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் வீட்டில் விஷம் குடித்துள்ளார்.

காதல் - தற்கொலை முயற்சி
காதல் - தற்கொலை முயற்சி

இதையடுத்து குடும்பத்தினர் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் முன்னாள் காதலி விஷம் குடித்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும், அவரைப் பார்ப்பதற்காகத் திருச்சி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் மகாதேவன்.

திருச்சி திருவரங்கம் கோயில்
திருச்சி திருவரங்கம் கோயில்

அப்போது அங்கிருந்த பெண்ணின் கணவரும், அவருடைய உறவினர்களும் சேர்ந்து மகாதேவனை அடித்து உதைத்தனர். இதனால் காயமடைந்த மகாதேவன் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அரசு மருத்துவமனையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism