Published:Updated:

முன்னாள் உளவுத்துறை அதிகாரி மரணம்; திட்டமிட்ட கொலை?! - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

குல்கர்னி மீது கார் மோதி தூக்கி வீசப்படும் காட்சி

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என்.குல்கர்னி சாலை விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலை என காவல்துறை விசாரித்துவருகிறது.

முன்னாள் உளவுத்துறை அதிகாரி மரணம்; திட்டமிட்ட கொலை?! - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என்.குல்கர்னி சாலை விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலை என காவல்துறை விசாரித்துவருகிறது.

Published:Updated:
குல்கர்னி மீது கார் மோதி தூக்கி வீசப்படும் காட்சி

மைசூரில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என்.குல்கர்னி நவம்பர் 4-ம் தேதி கார் மோதியதில் மரணமடைந்தார். இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில், பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை எப்போதும்போல வாக்கிங் சென்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என்.குல்கர்னி மீது வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்படும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது.

ஆர்.என்.குல்கர்னி
ஆர்.என்.குல்கர்னி
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில், மைசூரு மாநகராட்சி விதிகளை மீறிக் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டதாக அண்டை வீட்டாரிடம் கேள்வி எழுப்பியதால் குல்கர்னி கொலைசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆர்.என்.குல்கர்னியின் மருமகன் சஞ்சயா அங்காடி, "என் மாமனார் ஆர்.என்.குல்கர்னி-யின் பக்கத்து வீட்டுக்காரரான மாதப்பா கட்டடம் கட்டிவந்தார். சட்ட விதிகளை மீறிக் கட்டுமானத்தைத் தொடங்கினார்.

இதை எச்சரித்தும் அவர் கேட்காததால், என் மாமனார் மாநகராட்சியில் புகார் அளித்து, உயர் நீதிமன்றத்தில் கட்டுமானப் பணிக்கு தடையும் வாங்கினார். இதற்கு முன்பு பலமுறை அவர்மீது கொலை முயற்சி நடந்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை அதிகாரி, "ஐபிசி பிரிவுகள் 302 மற்றும் 34-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்.

காவல்துறை
காவல்துறை

இந்த வழக்கில் சந்தேகப்படும்படியாக மாதப்பா அவரின் மகன்கள் ஆகியோரை சஞ்சயா அங்காடி குறிப்பிட்டிருப்பதால், மூவரையும் விசாரணைக்காகக் காவலில் எடுத்திருக்கிறோம். இது ஒரு கொலை வழக்கு. இந்தச் செயலுக்குப் பின்னாலுள்ள சரியான காரணத்தை நிறுவ பல்வேறு கோணங்களில் நாங்கள் விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.