Published:Updated:

பண மோசடி வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ் கைது!

பண மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ் கைதுசெய்யப்பட்டார்.

கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா. சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

சிந்துஜா
சிந்துஜா
திருமணம் செய்வதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி! - முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன்மீது வழக்கு பதிவு

அவருடன் சேர்ந்து, கோவை தங்கமும் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அருண் பிரகாஷ் மீது கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அதேபோல, கோவை தங்கம், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் தனக்கும், இந்தப் பிரச்னைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனக் கூறி சிந்துஜா மீது புகார் அளித்திருந்தார். கோவை தங்கம், அவரின் மருமகன் அருண் பிரகாஷ் ஆகியோர் தேர்தலுக்கு முன்பாகத்தான் த.மா.கா-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்திருந்தனர்.

கைது
கைது

இதற்கிடையே, அருண் பிரகாஷ் மீது சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், ``அருண் பிரகாஷ் பணத்தைத் திருப்பித் தரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் கொடுத்த இரண்டு காசோலைகளை திரும்பி வந்துவிட்டன. எனவே, பணத்தைத் திரும்பத் தராததால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து, அருண் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.

 அருண் பிரகாஷ்
அருண் பிரகாஷ்

அந்த விசாரணையைத் தொடர்ந்து அருண் பிரகாஷ் நேற்று கைதுசெய்யப்பட்டார். பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு அவினாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு