மறைந்த முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் உடன்பிறந்த சகோதரர்கள், ஆர்.கே.ரவிச்சந்திரன், விஜய நல்லதம்பி. இதில், ஆர்.கே. ரவிச்சந்திரன் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். விஜய நல்லதம்பி வழக்கறிஞராக உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது, ஆவினின் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்தார் எனப்புகார் கொடுத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் விஜய நல்லதம்பி. இதைத்தொடர்ந்து அவர், அ.தி.மு.க.வின் பல்வேறு பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரை சந்தித்த விஜய நல்லதம்பி, தனது சகோதரர் ரவிச்சந்திரன், அண்ணி வள்ளி ஆகியோர் மீது அரசு வேலை பணமோசடி புகாரை கொடுத்து பரபரப்பாக்கியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதுதொடர்பாக, அவர் அளித்துள்ள புகாரில், " எனது சகோதரர் ரவிச்சந்திரன் தற்போது விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக உள்ளார். அவருடைய மனைவி வள்ளி, கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராக 2011-2016 வரையான காலத்தில் இருந்தார். என்னுடைய அண்ணி வள்ளி, மதர் தெரசா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய காலத்தில் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர், மேலும் அரசின் பல காலிப்பணியிடங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.40 லட்சம் வரை எனது சகோதரர் ரவிச்சந்திரனும், அண்ணி வள்ளியும் சேர்ந்து பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் உறுதியளித்தப்படி, யாருக்கும் எந்தவித பணிகளையோ, பணி நியமன ஆணைகளையோ வாங்கித்தரவில்லை.

அரசு வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் என்னை சாட்சியாக வைத்து பணம் கொடுத்ததால் தற்போது அவர்கள் என்னை நெருக்கடி செய்கின்றனர். நான், சமீபத்தில் தான் இதய அறுவைச் சிகிச்சை செய்துள்ளேன். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பலமுறை நானும், எனது சகோதரர் ரவிச்சந்திரனிடம் பணத்தை திருப்பித் தரும்படிக்கேட்டு விட்டேன். ஆனால், எனது சகோதரரும், அண்ணியும் பணத்தை திருப்பித் தராமல் காத்திருக்கச் சொல்லி பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்து ஏமாற்றி விட்டனர்.
மாறாக, அவர்கள் வாங்கிய பணத்தில் குறுகிய காலத்திலேயே பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே, அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.40 லட்சம் பணமோசடியில் ஈடுபட்ட எனது சகோதரர் ஆர்.கே.ரவிச்சந்திரன், அவருடைய மனைவி முன்னாள் துணைவேந்தர் வள்ளி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என அந்தப்புகாரில் கூறியுள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், விஜய நல்லதம்பியின் புகார் மனு விசாரணை நடத்துமாறு சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நல்லதம்பி சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரானார்.
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் சொந்த சகோதரர் மீதே விஜயநல்லதம்பி பணமோசடி புகார் கொடுத்துள்ளது அ.தி.மு.க.வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.