Published:Updated:

``கல்யாணம் பண்ணிக்கக் கேட்டா, மாட்டேன்னு சொல்லிட்டா...” - கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு

கொலை

திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பெண்ணை அடித்துக் கொன்று ஆற்றில் வீசியதாக, கொலையாளி கொடுத்துள்ள வாக்குமூலம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``கல்யாணம் பண்ணிக்கக் கேட்டா, மாட்டேன்னு சொல்லிட்டா...” - கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு

திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பெண்ணை அடித்துக் கொன்று ஆற்றில் வீசியதாக, கொலையாளி கொடுத்துள்ள வாக்குமூலம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

திருச்சி மாவட்டம், நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 11-ம் தேதி 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடலில் காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் சடலம், என்று தகவல் பரவ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற ஸ்ரீரங்கம் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்த பெண் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் முருவத்தூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி புவனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரியவந்தது.

கொலையான புவனா
கொலையான புவனா

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கணவரைப் பறிகொடுத்த புவனா, கட்டடக் கூலி வேலைக்குச் சென்று தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டுச் சென்றவர், வீடு திரும்பாமல் கொள்ளிடம் ஆற்றில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, புவனா தனது செல்போன் நம்பரிலிருந்து யார் யாருக்கெல்லாம் பேசியிருக்கிறார் என்பது குறித்து ஆய்வு செய்துவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலை
கொலை
சித்தரிப்புப் படம்

அதில் லால்குடியை அடுத்த கல்லக்குடியைச் சேர்ந்த நாகராஜ் (53) என்பவர் அடிக்கடி புவனாவிடம் போனில் பேசிவந்தது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து நாகராஜைப் பிடித்து போலீஸார் விசாரிக்க, `என்னோட மனைவி இறந்துட்டதால புவனாவோட எனக்கு தொடர்பு உண்டாச்சு. அடிக்கடி ரெண்டு பேரும் தனிமையில சந்திச்சிப்போம், இருப்போம். புவனாவுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். அவர் கணவர் இறந்த பின்னாடி, `நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்து வாழலாம்’னு நான் சொன்னேன். ‘அதெல்லாம் முடியாது. என்ன கல்யாணம் அது இதுன்னு சொல்ற’ன்னு என்கிட்ட புவனா எகிற, ரெண்டு பேருக்கும் இடையில சண்டை வந்துச்சு.

அதுக்குப் பின்னாடி புவனா என்கிட்ட சரியா பேசாம, என்கிட்ட இருந்து விலகிப் போனா.. ‘பிரச்னையைப் பேசி முடிச்சுக்கலாம். இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன்’னு சொல்லி, புவனாவை கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு வரவச்சேன். ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தோம். அதுககு அப்புறம் ரெண்டு பேருக்கும் இடையில மறுபடியும் சண்டை வந்துடுச்சு. `என்கூட இருக்கப் பிடிக்குது. ஆனா, என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கலையா’ன்னு நான் ஏற்கெனவே திட்டமிட்டு எடுத்துட்டுப் போன இரும்புக்கம்பியால புவனா தலையிலயே அடிச்சுக் கொன்னுட்டு, அங்கேயிருந்து ஓடிட்டேன்” என்றிருக்கிறார்.

அதையடுத்து நாகராஜைக் கைதுசெய்த போலீஸார், அவர்மீது வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.