Published:Updated:

`நடிகையுடன் நட்பு; பத்தாம் வகுப்பு..!' - போலி call centre-ன் `மாஸ்டர் மைண்ட்' கோபிகிருஷ்ணன்

கோபிகிருஷ்ணனின் குடும்பத்தினர்
கோபிகிருஷ்ணனின் குடும்பத்தினர்

நட்சத்திர ஹோட்டலில் நடந்த நைட் பார்ட்டியில் சந்தித்த நடிகையிடம், நான் ஒரு பிசினஸ் மேக்னட் என்றுகூறி அறிமுகமாகியுள்ளார் கோபிகிருஷ்ணன்.

போலி கால் சென்டர்களின் மாஸ்டர் மைண்ட் என்று அழைக்கப்படும் கோபிகிருஷ்ணனைப் பிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. அதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அப்பாவி மக்களிடமிருந்து ஏமாற்றிய பணம், யாருடைய வங்கிக் கணக்குக்குச் சென்றது என்ற விவரங்களைச் சேகரித்தனர்.

அப்போது கோபிகிருஷ்ணன் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குக்கும் பணம் சென்ற தகவல் கிடைத்தது. அதனால் மோசடியில் கோபி கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். ஆனால் அதற்குள் கோபி கிருஷ்ணனின் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.

``ஹலோ நான்தான் பேசுறேன்!'' - போலி Call Centre-களின் கண்ணீர்க் கதைகள்
நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட போலிகால்சென்டர்
நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட போலிகால்சென்டர்

இருப்பினும் போலீஸார், கோபிகிருஷ்ணனின் குடும்பத்தினரை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது அவர்கள் பதுங்கியிருக்கும் இடம் குறித்த ரகசிய தகவல் சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினருக்குக் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீஸார் கோபிகிருஷ்ணனின் அம்மா மீனாட்சி, அப்பா வாசு என்கிற விஜயகிருஷ்ணன் மற்றும் தங்கை நளினி, அலுவலக உதவியாளர் மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது போலி கால் சென்டர் குறித்து இன்னொரு முக்கியத் தகவல் தெரியவந்தது.

கோபி கிருஷ்ணனுக்கு வலதுகரமாக உமாபதி, சீதா மற்றும் சதீஷ் ஆகியோர் இருந்த தகவல் மத்திய குற்றப்பிரிவினருக்குக் கிடைத்தது. அதனால் அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உமாபதி, சீதா, சதீஷ் ஆகியோரிடம் விசாரித்தபோது கோபிகிருஷ்ணன் பதுங்கியிருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். மேலும் கோபிகிருஷ்ணனுக்குப் பணம் சப்ளை செய்தவர்கள் சிக்கியதால் கோபிகிருஷ்ணனால் தொடர்ந்து தலைமறைவாக இருக்க முடியவில்லை.

`நான் தவறு செய்துவிட்டேன்; ஆனால் பாஸுக்கு உண்மையாக இருந்தேன்!’ -போலி call centre-ன் பவர் பாயின்ட்
கால் சென்டரின் மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன்
கால் சென்டரின் மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன்

பணம் கையில் இல்லாததால் அவர் வெளியில் வர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். கோபிகிருஷ்ணனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் போலீஸார் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் அவர் இலங்கையில் பதுங்கியிருக்கும் தகவலை போலீஸார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இலங்கையிலிருந்து சென்னைக்கு கோபிகிருஷ்ணனை அழைத்துவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

அதனால் வேறுவழியின்றி இலங்கையிலிருந்து கோபிகிருஷ்ணன், விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் காத்திருந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கோபிகிருஷ்ணனைக் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது கோபிகிருஷ்ணனின் இன்னொரு முகம் தெரியவந்தது.

இவர், சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார்.

`பெண்ணின் காந்தக் குரல்; கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்
போலி கால்சென்டர்
போலி கால்சென்டர்

கோபி கிருஷ்ணன், பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். ஆரம்பத்தில் தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போது இன்ஷூரன்ஸ் தொழிலில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்த அவர், அதை வைத்தே பொதுமக்களை ஏமாற்றத் தொடங்கினார். இன்ஷூரன்ஸ் தொழிலில் கமிஷன் தொகை அதிகளவில் கிடைத்தால் தன்னுடன் பணியாற்றியவர்கள் சிலர் மூலம் தனியாக இன்ஷூரன்ஸ் தொழிலைச் செய்ய கோபிகிருஷ்ணன் திட்டமிட்டார். இதையடுத்து வடபழனியில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்த கோபிகிருஷ்ணன், அங்கு இன்ஷூரன்ஸ் அலுவலகத்தை ஆரம்பித்தார். அப்போது கோபிகிருஷ்ணனுக்கு உறுதுணையாக செல்வா என்கிற செல்வக்குமார், முனீர் உசேன் ஆகியோர் இருந்தனர்.

அந்த அலுவலகம் பெயருக்குத்தான் இன்ஷூரன்ஸ் அலுவலகமாக இருந்தது. மற்றபடி பொதுமக்களுக்கு போன் செய்து பணத்தை ஏமாற்றும் கால் சென்டராகச் செயல்படத் தொடங்கியது. அதன்மூலம் கோபிகிருஷ்ணனின் வங்கிக் கணக்கில் பணம் கொட்டத் தொடங்கியது. இதையடுத்து கோபிகிருஷ்ணன், போலி கால்சென்டர்களின் கிளையை சென்னை முழுவதும் தொடங்கினார். அந்தக் கிளைகளுக்கு நம்பிக்கையானவர்களை முக்கியப் பொறுப்பில் பணியமர்த்தினார். கைநிறைய பணம், சொகுசான வாழ்க்கை என இருந்த கோபிகிருஷ்ணனின் ஃலைப் ஸ்டைல் ரொம்பவே மாறிவிட்டது.

போலி கால் சென்டர் இலக்கு
போலி கால் சென்டர் இலக்கு

போலி கால் சென்டர்களுக்கு இலக்கையும் கோபிகிருஷ்ணன் நிர்ணயித்தார். இலக்கை அடையும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து அசத்தினார். கார்ப்பரேட் அலுவலகம் போலவே போலி கால் சென்டர்களின் அலுவலகங்கள் செயல்பட்டன. அதனால், அங்கு வேலை பார்ப்பவர்கள் யாருக்கும் ஒருதுளி அளவு கூட சந்தேகம் வரவில்லை. இந்தச் சமயத்தில்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த பிரபலமான லைப் ஷோவுக்குத் தேர்வு செய்யப்பட்டார் அந்த நடிகை.

ஐ என்ற ஆங்கில எழுத்தை தன்னுடைய பெயரின் முதல் எழுத்தாகக் கொண்ட அந்த நடிகையை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த நைட் பார்ட்டியில் கோபிகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது, நடிகையிடம் தன்னை ஒரு பிசினஸ் மேக்னட் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு இருவரும் நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த பார்ட்டிகளில் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

பத்தாம் வகுப்பு வரை கோபிகிருஷ்ணன் படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவார். அந்த நடிகையுடன் கோபிகிருஷ்ணனுக்கு நட்பு ஏற்பட்ட தகவல், அவரின் குடும்பத்தில் விரிசல்களை ஏற்படுத்தியது. ஆனால் நடிகைக்காக குடும்பத்தைவிட்டு பிரியும் மனநிலையில் இருந்தார் கோபிகிருஷ்ணன். போலி கால் சென்டர் மூலம் கொட்டிய பணத்தை நடிகைக்காக கோபிகிருஷ்ணன் செலவழித்ததை போலீஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

போலி கால்சென்டர்
போலி கால்சென்டர்

இதையடுத்து அந்த நடிகையிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். அப்போது கோபிகிருஷ்ணனின் சுயரூபத்தைக் கேட்ட அந்த நடிகை அதிர்ச்சியில் உறைந்துள்ளார். போலீஸ் விசாரணையில் அந்த நடிகைக்கும் போலி கால் சென்டர் மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற தகவல் தெரியவந்தது. இதையடுத்து நடிகை மீது விழுந்த போலீஸாரின் சந்தேகப் பார்வை விலகியது. தற்போது கோபிகிருஷ்ணனின் நட்பு வட்டாரத்திலிருந்து அந்த நடிகை வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டார்.

கோபிகிருஷ்ணன் சிறைக்குச் சென்ற தகவலைக் கேள்விப்பட்டதும் அவருக்கு உறுதுணையாக இருந்த செல்வா, முனீர் உசேன் ஆகியோர் தனித்தனியாக இந்த மோசடி தொழிலில் கால் பதிக்கத் தொடங்கினார். கோபிகிருஷ்ணனிடம் ஏமாந்த அப்பாவி மக்கள், அதன்பிறகு செல்வா, முனீர் உசேன் ஆகியோரால் ஏமாற்றப்பட்டனர். அவர்கள் எப்படி ஏமாந்தார்கள் என்ற தகவலை அடுத்த பகுதியில் பார்க்கலாம்

- தொடரும்

அடுத்த கட்டுரைக்கு