Published:Updated:

5,000 பேர்… ரூ.100 கோடி… தேனி மக்களை ஏமாற்றிய போலி நிறுவனம்!

பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள்

2,000 பேருக்கு பணம் திருப்பிக் கொடுத்திருக்கிறோம் எனப் பொய் கூறினார் ராஜேஷ். சுமார் 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.

2011 முதல் 2018 வரை தேனியில், ஜெயம் வெல்த் அக்ரோடெக் லிமிடெட் என்கிற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனத்தில் பணத்தைச் செலுத்தி ஏமாந்த சுமார் 100 பேர், செங்கதிர் இயக்கம் சார்பில், இன்று தேனி கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவை சந்தித்து முறையிட்டனர்.

முத்து
முத்து

நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முத்து, ``தேனி நகரின் பெத்தாச்சி விநாயகர் கோயில் எதிர்புறம் உள்ள மாடியில்தான் இந்த நிறுவம் செயல்பட்டுவந்தது. மாதத் தவணையாக 1,000 முதல் 5,000 வரை பணம் செலுத்தலாம். ஐந்து வருடம் பணம் செலுத்தினால் 125 சதுர அடி நிலம் அல்லது ஐந்து வருடம் செலுத்திய தொகைக்கு 12.5 % வட்டி சேர்த்து பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது. அவர்களின் பேச்சை நம்பி சுமார் 5,000 பேர் வரை அந்நிறுவனத்தில் பணம் செலுத்தினார்கள்.

`சரக்கு விக்கற இடம் தெரியும்..எங்களோடு வாங்க.!' -கேரள இளைஞர்களைப் பதறவைத்த தேனி கும்பல்

ஐந்து வருடம் முடிந்தவுடன், பணம் அல்லது நிலம் கொடுக்காமல் பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயன்றார்கள். உடனே, தேனி காவல்நிலையத்தில் புகார் கூறினோம். நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் என்பவரை போலீஸார் பிடித்தனர். `என்னிடம் இப்போது பணம் இல்லை. ஒரு வருடம் அவகாசம் கொடுத்தால், அனைவரது பணத்தையும் திருப்பிக் கொடுக்கிறேன்’ என உறுதியளித்தார். அவர் அன்று சொன்ன ஒரு வருடம் முடிந்து ஒரு மாதம் ஆகிறது. அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய லெட்சுமி, ``அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் ஒருவருக்குக்கூட பணம் திருப்பிக் கொடுக்கவில்லை. சுமார் 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.

கலெக்டர் அலுவலகம் வந்த பாதிக்கப்பட்ட மக்கள்.
கலெக்டர் அலுவலகம் வந்த பாதிக்கப்பட்ட மக்கள்.
`விதைக்கு வட்டி; மாடுகளுக்கு பாஸ்!' - தேனி விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காரசார விவாதம்

எல்லோரும் ஏழை எளிய மக்கள். அன்றாடம் வேலைக்குச் சென்று சம்பாதித்த காசை சேமித்து நிலம் வாங்கிவிடலாம் என கனவு கண்டார்கள். ஏமாந்தவர்களுக்கு ஒரு உரிய நிவாரணம் வேண்டும். ஏமாற்றியவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். உரிய நிவாரணம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட முடிவு செய்திருக்கிறோம்” என்றார் வேதனையோடு.

கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் பேசிய அனைவரும், பணத்தை மீட்டுத் தர கேட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலளித்த கலெக்டர், ``எப்படி இவ்வளவு பேர் ஏமாந்தீர்கள்?” என்று அதிர்ச்சியடைந்தவர், ``காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு