Published:Updated:

திண்டுக்கல்: `திடீர் ரெய்டு; பறிபோன பணம், சொத்து ஆவணங்கள்!’ - சிக்கிய போலி அரசு அதிகாரிகள்

தனிப்படையினரை பாராட்டும் ஐ.ஜி
தனிப்படையினரை பாராட்டும் ஐ.ஜி

போலி அரசு அதிகாரிகள் என கூறி, பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை, கைது செய்துள்ளனர், திண்டுக்கல் போலீஸ் தனிப்படையினர்.

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, காலை, காளீஸ்வரன் வீட்டிற்கு காரில் வந்த சிலர், தங்களை அரசு அதிகாரிகள் என கூறியுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக காளீஸ்வரனை மிரட்டிய அந்த மர்ம கும்பல், வீட்டை சோதனை செய்து, இறுதியாக, பீரோ சாவியைக் கேட்டுள்ளனர். பயந்துபோன, காளீஸ்வரன், பீரோ சாவி, தனது மனைவியிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அவர், அருகே உள்ள அங்கன்வாடியில் பணியாற்றிவருவதாகவும் கூற, அந்த கும்பல், தங்களுடைய காரில் சென்று காளீஸ்வரனின் மனைவியை அழைத்துவந்து, பீரோ சாவியைப் பெற்று, உள்ளே இருந்த பணம், நிலப்பத்திரம் உட்பட ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றது.

போலீஸ்
போலீஸ்
கத்தி முனையில் பூசாரி குடும்பம்; 100 பவுன் நகைக் கொள்ளை! -திண்டுக்கல் அதிர்ச்சி

இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் காளீஸ்வரன் புகார் கொடுக்க, வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், மர்ம கும்பல் பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தென்மண்டல ஐ.ஜி உத்தரவின் பேரில், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி மற்றும், திண்டுக்கல் எஸ்.பி ஆகியோரின் ஆலோசனையில், மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் இறக்கிய தனிப்படையினர், திருப்பூரில் பதுக்கி இருந்த கும்பலை பிடித்தனர். கோபி (வயது 40), மாலதி (வயது 39), வினோத் (வயது 23), அய்யப்பராஜன் (வயது 34), முத்துக்குமார் (வயது 27), குகன் (வயது 48) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 100 சவரன் தங்க நகைகள், ரூ 5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தனிப்படையினரை பாராட்டும் ஐ.ஜி
தனிப்படையினரை பாராட்டும் ஐ.ஜி

வழக்கு விசாரணையை திறம்பட செய்த தனிப்படையைச் சேர்ந்த, சார்பு ஆய்வாளர்கள் மாரிமுத்து, பாஸ்டின், தினகரன், தலைமைக் காவலர்கள் சங்கரநாராயணன், சந்தியாகு, செந்தில்குமார், மருதுபாண்டி, அருளானந்து, மற்றும் முதல்நிலைக் காவலர் பிரபாகரன் ஆகியோரை தென்மண்டல ஐ.ஜி பாராட்டினார்.

இது புறம் என்றால், காளீஸ்வரன், எப்படி இவ்வளவு பணம் மற்றும் நகைகள் சேர்த்துள்ளார் என்பது குறித்து விசாரிக்க வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு அறிக்கை அனுப்பப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! - திண்டுக்கல் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
அடுத்த கட்டுரைக்கு