Published:Updated:

'சாமி என்னை விட்டிருங்க; கதறிய பெண்!'- பேய் ஓட்டுவதாகக்கூறி பெண்களை அடித்த சாமியார் கைது.

பெண்ணை அடிக்கும் சாமியார்
பெண்ணை அடிக்கும் சாமியார்

குறி சொல்கிறேன் என்ற பெயரில் பெண்களை அடித்து துன்புறுத்தியும், ஒருமையில் பேசியும் வதைசெய்த சாமியாரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் அருகே உள்ள காதப்பள்ளி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகன் அனில்குமார் (வயது: 40). இவர், புதுச்சத்திரம் அருகே மஞ்ச நாயக்கனூர் காம்ளாகரடு பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் தங்கியிருந்து, பூஜை செய்துகொண்டு பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டுவதாக கூறி அங்கு பூஜை செய்து வருகிறார். இதனால், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு பேய் பிடித்ததாகக் கூறி, அவர்களிடமிருந்து பேயை விரட்ட வேண்டும் என்று அங்கு சம்பந்தபட்ட பெண்களை கூட்டி வந்து இருந்தனர்.

பெண்ணை அடிக்கும் சாமியார்
பெண்ணை அடிக்கும் சாமியார்

இந்நிலையில், சாமியார் அனில்குமார் அவ்வப்போது மது அருந்திவிட்டு அங்கு பேய் விரட்டவரும் பெண்களை பிரம்பால், சவுக்கால் அடித்தும் , கால்களால் மிதித்தும் சித்திரவதை செய்து வந்துள்ளார். அப்போது, அடி தாங்க முடியாமல் சில பெண்கள், தங்களை விட்டுவிடுமாறு கதறி அழுவதும், அதற்கு சாமியார், 'கண்ணீர் வருதா?' என்று கூறி அடிப்பதும் போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வலம் வந்தன.

நாமக்கல்: கடன் பிரச்னை... குழந்தையை இரண்டரை லட்சத்திற்கு விற்ற தாய்!

அந்தக் காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைத்தது. இந்த வீடியோக்கள் லோக்கல் வாட்ஸ்அப் குரூப்களில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்த தகவல் அறிந்த பொம்மம்பட்டி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் சஞ்சய்குமார், நேரில் சென்று சம்பவங்களை ஆய்வு செய்தார். அதன்பிறகு, சாமியார் அனில்குமார் பெண்களை அடித்து துன்புறுத்தியது உண்மைதான் என்பதை அறிந்தார். அதன்பிறகு, வேலகவுண்டன்பட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

பெண்ணை அடிக்கும் சாமியார்
பெண்ணை அடிக்கும் சாமியார்

அப்போதும், மது அருந்திக் கொண்டு அந்த சாமியார் அனில்குமார் அங்கு பெண்களை அவமரியாதை செய்து பிரம்பு மற்றும் சவுக்கால் அடித்துக் கொண்டிருப்பதும், கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில், அனில்குமாரை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர். பெண்களை சாமியார் ஒருவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு