Published:Updated:

கடன் பிரச்னை... மகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்! - குமரியில் சோகம்

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பிரச்னை... மகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்! - குமரியில் சோகம்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை அடுத்துள்ள வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்குட்டி (47). கூலித் தொழிலாளி. இவரின் மனைவி ராஜேஸ்வரி (45), மகள் நித்யா (26). கிருஷ்ணன்குட்டி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவரின் மகள் நித்யாவைத் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். கணவர் வீட்டில் பிரச்னை காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நித்யா விவாகரத்து பெற்றிருக்கிறார். பின்னர் தன் பெற்றோர் வீட்டிலேயே வசித்துவந்தார் நித்யா.

கிருஷ்ணன்குட்டியின் வீடு
கிருஷ்ணன்குட்டியின் வீடு

இதற்கிடையே கிருஷ்ணன்குட்டியின் மனைவி ராஜேஸ்வரிக்கு கிட்னி பிரச்னை இருந்துவந்திருக்கிறது. அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில்தான் நேற்று காலை கிருஷ்ணன்குட்டியின் வீட்டுக் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை. அந்தப் பகுதியினர் வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கிருஷ்ணன்குட்டி, அவரின் மனைவி, மகள் மூவரும் பிணமாகக் கிடந்துள்ளனர். அது பற்றி அருமனை போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அருமனை போலீஸார் அங்கு சென்று மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கிருஷ்ணன்குட்டி தன் மகளின் திருமணத்தின்போது பல லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு மனைவியின் சிகிச்சைக்காகப் பண நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடன் பிரச்னை காரணமாக அவர்கள் நேற்று இரவு தூங்கச் செல்லும்போது விஷம் குடித்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்டவர்கள்
தற்கொலை செய்துகொண்டவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மையம்
தற்கொலை தடுப்பு மையம்