Published:Updated:

கிருஷ்ணகிரி: ``என் நிலத்துல பொருள்களை எடுத்தாரு, கொன்னுட்டேன்!"- விவசாயி கொலை; முதியவர் கைது

கொலை
News
கொலை

‘‘அவர்கள் கிராமத்தில் நேற்றிரவு தெருக்கூத்து நடந்திருக்கிறது. வேடிக்கை பார்க்கச்சென்ற கிருஷ்ணப்பாவைத் தனியாக பேசவேண்டுமென அழைத்துச் சென்ற அப்பையப்பா கொலைசெய்திருக்கிறார்.’’ – போலீஸார்

Published:Updated:

கிருஷ்ணகிரி: ``என் நிலத்துல பொருள்களை எடுத்தாரு, கொன்னுட்டேன்!"- விவசாயி கொலை; முதியவர் கைது

‘‘அவர்கள் கிராமத்தில் நேற்றிரவு தெருக்கூத்து நடந்திருக்கிறது. வேடிக்கை பார்க்கச்சென்ற கிருஷ்ணப்பாவைத் தனியாக பேசவேண்டுமென அழைத்துச் சென்ற அப்பையப்பா கொலைசெய்திருக்கிறார்.’’ – போலீஸார்

கொலை
News
கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த ராமச்சந்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணப்பா (52). இன்று அதிகாலை, அப்பகுதியிலுள்ள விளைநிலம் அருகே, கத்திக்குத்து காயங்களுடன் கற்களால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் சடலத்தை மீட்ட பேரிகை போலீஸார் விசாரணை நடத்தியதில், கிருஷ்ணப்பாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த, இவரது விளைநிலத்துக்கு அருகிலுள்ள விவசாயக்கூலி அப்பையப்பாவுக்கும் (60) முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணப்பா
கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணப்பா

அப்பையப்பாவைப் பிடித்து விசாரித்ததில், கிருஷ்ணப்பா விளைநிலத்துக்கு அருகே பெங்களூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில், அப்பையப்பா விவசாயக் கூலி வேலை செய்துவந்ததும், அந்த நிலத்திலிருந்த பொருள்கள் சிலவற்றை கிருஷ்ணப்பா திருடியதாக நினைத்து அவரைக் கொன்றதும் தெரியவந்திருக்கிறது.

குற்றவாளி அப்பையப்பா
குற்றவாளி அப்பையப்பா

இது குறித்து தனிப்பிரிவு போலீஸாரிடம் விசாரித்தோம். ‘‘அப்பையப்பா வேலை செய்துவந்த விளைநிலத்தில் பைப், மல்ஷிங் ஷீட் உட்பட பல பொருள்கள், தொடர்ந்து காணாமல் போயிருக்கின்றன. கிருஷ்ணப்பாதான் அவற்றைத் திருடியதாக நினைத்த அப்பையப்பா, அவரைக் கொலைசெய்ய  திட்டமிட்டிருக்கிறார். அவர்கள் கிராமத்தில் நேற்றிரவு தெருக்கூத்து நடந்திருக்கிறது. வேடிக்கைப் பார்க்கச் சென்ற கிருஷ்ணப்பாவைத் தனியாகப் பேசவேண்டுமென அழைத்துச் சென்ற அப்பையப்பா, கத்தியால் குத்தி கீழே தள்ளி, அங்குள்ள கல்லைத் தலையில் போட்டுக் கொலைசெய்திருக்கிறார். மேலும், `என் நிலத்துல பொருள்களை எடுத்துட்டாரு, நிறைய நஷ்டம் ஆச்சு அதான் கொன்னுட்டேன்' என வாக்குமூலமும் அளித்திருக்கிறார். கொலைக்கான உண்மைக் காரணம் குறித்து முழுமையாக விசாரிக்கிறோம்’’ என்றனர்.