Published:Updated:

ஊரடங்கில் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பிய விவசாயி தற்கொலை - டெல்லியில் அதிர்ச்சி

பப்பன் சிங் கெலாட் தற்கொலை ( ட்விட்டர் )

ஊரடங்கின்போது தன்னுடைய தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த விவசாயி பப்பன் சிங் கெலாட் தற்கொலை செய்துகொண்டது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

2020-ம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின்போது ஊரடங்கு போடப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மனைவி, குழந்தைகளோடு பல நூறு கிலோமீட்டர் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்து சென்றனர். அந்த நிலையில், டெல்லியில் தன்னிடம் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார் செல்வதற்கு, கடும் பொருளாதார நெருக்கடியிலும் விமான டிக்கெட் எடுத்து வழியனுப்பிவைத்தவர் காளான் விவசாயி பப்பன் சிங் கெலாட். மேலும், தொழிலாளர்கள் ஊரடங்கு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பவும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். அவரின் இந்தச் செயல் பலரின் பாராட்டை பெற்றுத்தந்தது. இந்த நிலையில் பப்பன் சிங் கெலாட், நேற்று டெல்லியிலுள்ள ஒரு கோயிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தொழிலாளர்களுடன் பப்பன் சிங் கெலாட்
தொழிலாளர்களுடன் பப்பன் சிங் கெலாட்
ட்விட்டர்

இது தொடர்பாக காவல்துறை, ”டெல்லி அலிப்பூரிலுள்ள கெலாட்டின் வீட்டின் முன்புறம் பகோடா கோயிலின் மின்விசிறியில் அவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. மேலும், அந்த இடத்திலிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பும் கிடைத்திருக்கிறது. அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறோம். அவரின் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

விவசாயி பப்பன் சிங் கெலாட் தற்கொலை செய்துகொண்டது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.