Published:Updated:

சிறுமி பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 7 ஆண்டு, பூசாரிக்கு சாகும்வரை சிறை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

மகளிர் விரைவு நீதிமன்றம்

சிறுமிக்கு முன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிறுமியின் தந்தைக்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையும், பேய் ஓட்டுவதாக பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு சாகும்வரை சிறைதண்டனையும் வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 7 ஆண்டு, பூசாரிக்கு சாகும்வரை சிறை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

சிறுமிக்கு முன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிறுமியின் தந்தைக்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையும், பேய் ஓட்டுவதாக பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு சாகும்வரை சிறைதண்டனையும் வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Published:Updated:
மகளிர் விரைவு நீதிமன்றம்

ராமநாதபுரத்தில் 11-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை அவர் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துவந்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்குப் பேய் பிடித்துவிட்டதாக, அவர் தாய் கடந்த 2021 செப்டம்பர் மாதம் ராமநாதபுரம் கொட்டகை கிராமத்தைச் சேர்ந்த பூசாரி சிவக்குமாரிடம் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சிறுமி தன்னுடைய தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதை பூசாரி சிவக்குமாரிடம் கூறியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும் பேய் ஓட்ட வேண்டும் என அடிக்கடி சிறுமியை அழைத்துவந்து பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி அவர் தாயிடம் தெரிவித்துள்ளார். அதன்படி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் சிறுமி புகார் அளித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பூசாரி சிவக்குமார்
பூசாரி சிவக்குமார்

இதையடுத்து சிறுமியின் தந்தை மற்றும் பூசாரி சிவக்குமார் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஆறு மாதம் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்த நீதிபதி சுபத்ரா தீர்ப்பு வழங்கினார்.

அதில், மகள் என்றும் பாராமல் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதமும், கட்ட தவறும்பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி சிவக்குமாருக்கு சாகும்வரை சிறைதண்டனையும், ஐந்து லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏழு லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism