Published:Updated:

சென்னை: குளிர்பானத்தில் மது; பெற்ற மகளுக்குப் பாலியல் தொல்லை! - தந்தை, சித்தி கைது

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

மெரினா கடற்கரையில் அமர்ந்திருந்த சிறுமியிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னுடைய தந்தை குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கண்ணீர்மல்கக் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). இவரின் முதல் மனைவி உயிரிழந்துவிட்டார். அதனால் கஸ்தூரி என்பவரை குமார் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். குமாரின் முதல் மனைவிக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இவர் வீட்டைவிட்டு வெளியேறி சென்னை மெரினா கடற்கரைப் பகுதிக்கு வந்தார். கடற்கரை மணலில் சோகத்துடன் அந்தச் சிறுமி அமர்ந்திருந்தார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட மெரினா காவல் நிலைய போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய வீடு செங்கல்பட்டில் இருப்பதாகவும், வீட்டில் நடந்த கசப்பான சம்பவங்களால் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும், இனிமேல் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை எனவும் கூறினார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதையடுத்து சிறுமி திருவொற்றியூரிலுள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்கப்பட்டது. சிறுமியிடம் காப்பக ஊழியர்கள் விசாரித்தபோது, தந்தையால் சொல்ல முடியாத தொல்லைகளை அனுபவித்ததாகக் கூறினார். அதனால் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த அவர், சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது சிறுமி, குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து தன்னுடைய தந்தை குமார், பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கண்ணீர்மல்கக் கூறினார். அதற்கு தன்னுடைய சித்தி கஸ்தூரியும் உடந்தை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவலின்படி போலீஸார் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்த சிறுமியின் அப்பா குமார், சித்தி கஸ்தூரி ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, வீடியோக்கள்! -குட்கா ரெய்டுக்குச் சென்றபோது சிக்கிய கடைக்காரர்
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``அந்தச்சிறுமி மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை, கவுன்சலிங் அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். சிறுமியின் அம்மா உயிரிழந்த நிலையில், சித்தியிடம் அவர் வளர்ந்து வந்திருக்கிறார். மதுபோதைக்கு அடிமையான சிறுமியின் தந்தை, பெற்ற மகள் என்றுகூட பாராமல் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்தத் தகவலை வெளியில் சொல்லாமல் சிறுமியின் சித்தி கஸ்தூரி மறைத்திருக்கிறார். அதனால்தான் சிறுமியின் தந்தை, சித்தியைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.

மைசூரு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்; தமிழகத்தில் 5 பேரைக் கைதுசெய்த தனிப்படை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு