Published:Updated:

காதலித்த மகளை அடித்து ஆற்றில் தள்ளிவிட்ட தந்தை; தத்தளித்தவரைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

காதலித்ததால், பெற்ற மகளை ஆற்றில் தள்ளி கொல்ல முயன்றுள்ளார், தந்தை. இந்த அதிர்ச்சி சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

Chinnamanoor Police Station
Chinnamanoor Police Station

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ளது ஊத்துப்பட்டி என்ற கிராமம். இங்கு வசிக்கும் ராஜா என்பவரது மகள் திவ்யா (பெயர் மாற்றம்). பொரி வியாபாரம் செய்யும் ராஜா, தனது மகளை போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்கவைத்துப் படிக்க வைக்கிறார். இந்நிலையில் திவ்யா, உறவுக்காரர் ஒருவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிய வர, திவ்யாவை அழைத்து பலமுறை கண்டித்துள்ளார்.

Raja
Raja

இந்நிலையில், நேற்று கல்லூரியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் திவ்யாவை வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார் ராஜா. வரும் வழியில், திடீரெனக் கோபமடைந்த ராஜா, மார்கையன்கோட்டை அருகே உள்ள ஆற்றுப்பாலத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, திவ்யாவை கடுமையாகத் திட்டி, அடித்து, ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

'அக்காவுக்கு வந்த ப்ரோபசல்... வித்தியாசமாக படம் எடுத்த தங்கை!' - வைரலான அமெரிக்க காதல் எபிசோடு

தண்ணீரின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்ட திவ்யா, மரக்கிளை ஒன்றைப் பிடித்துக் கரை சேர்ந்துள்ளார். உடலில் காயம் ஏற்படவே, எழுந்து நடக்க முடியாமல் உதவி கோரி சத்தம் எழுப்பியுள்ளார். அப்போது அவ்வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் அவர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காதலித்த மகளை அடித்து ஆற்றில் தள்ளிவிட்ட தந்தை; தத்தளித்தவரைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

சம்பவம் அறிந்து விசாரணைசெய்த சின்னமனூர் போலீஸார், ராஜாவைக் கைதுசெய்தனர். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தாய் கவிதாவும் கைதாகியுள்ளார். தற்போது திவ்யா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.