Published:Updated:

கரூர்: மனைவியோடு தகராறு; குழந்தைகளோடு தற்கொலைக்கு முயன்ற கணவர்! - 2 குழந்தைகள் பலியான சோகம்

புதூர் கிராமத்திலுள்ள விவசாயக் கிணற்றில் அதிகாலை 6 மணியளவில், 'எங்களைக் காப்பாத்துங்க' எனச் சத்தம் கேட்டிருக்கிறது. அந்தச் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, இரண்டு குழந்தைகள் கிணற்றில் பிணமாக மிதந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனைவியோடு ஏற்பட்ட தகராறு காரணமாக, இரண்டு குழந்தைகளோடு கிணற்றில் குதித்து அந்தப் பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயல, அந்த இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குளித்தலை
குளித்தலை
கரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (34). பொக்லைன் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவருடைய மனைவி பழனியம்மாள் என்கிற பிரியா (26). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்தத் தம்பதிக்கு ருதர்சனாஸ் (5) என்ற மகளும், கிருஷ்ணா (3) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இதனால், தகராறு அதிகரிக்கும்போது, முருகேசனின் மனைவி பிரியா, கணவரோடு கோபித்துக்கொண்டு தனது பிறந்த வீட்டுக்குச் சென்றுவிடுவாராம். பிறகு, இரண்டு பேரின் உறவினர்களும் சமாதானம் பேசி, பிரியாவை முருகேசனுடன் சேர்ந்து வாழவைப்பார்களாம். இந்த நிலையில், வழக்கம்போல் கணவன், மனைவி இடையே இரவு நேரத்தில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால், மனமுடைந்த முருகேசன், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளையும் இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வெளியே சென்றிருக்கிறார். அப்படி வெளியில் சென்று அவர்கள் மூன்று பேரும், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த பிரியா, தனது கணவர், குழந்தைகளைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்திருக்கிறார். ஆனால் அவர்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தோகைமலை அருகேயுள்ள புதூர் கிராமத்திலுள்ள விவசாயக் கிணற்றில் மறுநாள் அதிகாலை 6 மணியளவில், 'எங்களைக் காப்பாதுங்க' என சத்தம் கேட்டிருக்கிறது.

பலியான குழந்தைகள்
பலியான குழந்தைகள்

அந்தச் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, இரண்டு குழந்தைகள் கிணற்றில் பிணமாக மிதந்தனர். மேலும், ஒருவர் கைமுறிந்த நிலையில் இருந்தார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் குளித்தலை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், குளித்தலை காவல் நிலைய போலீஸார் மற்றும் முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், அவர்கள் கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தவரையும், இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். அதன் பிறகு, போலீஸார் நடத்திய விசாரணையில்தான், அவர் முருகேசன் என்றும், மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முருகேசன் உயிர் பயத்தில் தற்கொலை முடிவைக் கைவிட்டிருக்கிறார். இதையடுத்து, முருகேசனை போலீஸார் கைது செய்தனர். மேலும், முருகேசனின் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்ட குளித்தலை காவல் நிலைய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளை தந்தையே கிணற்றில் வீசிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு