Published:Updated:

சென்னை: வீட்டில் தனியாக இருந்த மகள்... குடிபோதையில் எல்லை மீறிய தந்தை! -போக்சோ வழக்கில் கைது

போக்சோ வழக்கு
News
போக்சோ வழக்கு

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மகளை குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரின் 16 வயது மகளுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக மகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார் அந்தப் பெண். சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அதைக் கேட்டு சிறுமியின் அம்மா அதிர்ச்சியடைந்தார். பின்னர் மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார் அந்தப் பெண். அப்போது, கடந்த ஜூன் மாதம் வீட்டில் யாரும் இல்லாதபோது, குடிபோதையில் அப்பா தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி அம்மாவிடம் தெரிவித்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதற்கிடையில் மருத்துவமனையிலிருந்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சிறுமியிடமும், அவரின் அப்பாவான ஏழுமலையிடம் விசாரித்தனர். விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்துக்கு தந்தையே காரணம் எனத் தெரியவந்தது. அதனால் ஏழுமலை மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைச் சிறையில் அடைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான ஏழுமலை, சமையல் வேலை செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். சம்பவத்தன்று ஏழுமலையின் மனைவி சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். சிறுமியின் தங்கை பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது வீட்டுக்கு குடிபோதையில் வந்த ஏழுமலை, மகளிடம் அத்துமீறியிருக்கிறார்" என்றனர்.