Published:Updated:

சென்னையில் மகளுடன் மாடியிலிருந்து குதித்த தனியார் நிறுவன கேஷியர்!’- மன உளைச்சலால் விபரீத முடிவு?

தற்கொலை
தற்கொலை

சில மாதங்களாக மன உளைச்சல் காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

சென்னை, மாதவரத்தை அடுத்த பொன்னியமன்மேடு பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் திருப்பதி ரெட்டி( 35). இவர், சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பூண்டுக் கிடங்கு ஒன்றில் கேஷியராக வேலை செய்து வந்தார். சில மாதங்களாக மன உளைச்சல் காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், திருப்பதி ரெட்டி திடீரென தனது மகளை தூக்கிக் கொண்டு வீட்டின் 3வது மாடிக்குச் சென்று உள்ளார். சிறிது நேரத்தில் மாடியிலிருந்து தனது மகளுடன் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இருவருக்கும் தலை, கை, கால் பகுதிகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர், பலத்த காயமடைந்த இருவரையும் உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே இருவரும் இறந்துள்ளனர்.

திருப்பதி ரெட்டி
திருப்பதி ரெட்டி

இதுகுறித்து மாதவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரின் உடலையும் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக வாட்ஸ்அப் சாட்... தந்தையைப் போலவே தற்கொலை? - மர்ம மரணம் அடைந்த முன்னாள் முதல்வர் மகன்
அடுத்த கட்டுரைக்கு