Published:Updated:

வேலூர்: 2 மகள்களுடன் தூக்கில் தொங்கிய தந்தை... புடவை அறுந்ததால் உயிர்த் தப்பிய மூத்த மகள்!

தற்கொலை

மனைவி இறந்த துக்கத்திலிருந்த நபர் தன் இரு மகள்களுடன் தற்கொலைக்கு முயன்றார். இதில், அந்த நபரும், அவரின் இளைய மகளும் உயிரிழந்தச் சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர்: 2 மகள்களுடன் தூக்கில் தொங்கிய தந்தை... புடவை அறுந்ததால் உயிர்த் தப்பிய மூத்த மகள்!

மனைவி இறந்த துக்கத்திலிருந்த நபர் தன் இரு மகள்களுடன் தற்கொலைக்கு முயன்றார். இதில், அந்த நபரும், அவரின் இளைய மகளும் உயிரிழந்தச் சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை

வேலூர், காட்பாடி டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்துவந்தார். இவரின் மனைவி சிவகுமாரி ஓராண்டுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்துவிட்டார். தன் இரு மகள்களையும் அரவணைத்து பாதுகாத்துவந்த தினகரன், மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீளமுடியாமல் விரக்தியுடனேயே காணப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தன் உயிரை மாய்த்துகொள்ள அவர் முடிவுசெய்தார். மகள்களை விட்டுச் செல்ல மனமில்லாமல், அவர்களையும் தற்கொலை முடிவுக்குத் தள்ளினார். நேற்றிரவு மகள்கள் இரண்டு பேருடன் படுக்கை அறையில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட தந்தை - மகள்
தற்கொலை செய்து கொண்ட தந்தை - மகள்

ஆனால், மூத்த மகள் மின்விசிறியில் சுற்றியிருந்த புடவை அறுந்ததால், கீழே விழுந்து உயிர் தப்பினார். தினகரனும், அவரின் இளைய மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். தனி ஒருவராக தினகரனின் மூத்த மகளால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. கத்தி, கூச்சலிட்டு அக்கம் பக்கம் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள்ளாக இருவரும் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து, விருதம்பட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்திவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism