Published:Updated:

கண்டித்தும் கேட்காமல் காதலனுடன் சென்ற மகள்; விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட தந்தை!

தந்தை தற்கொலை

சென்னையில் காதலனுடன் மகள் சென்ற விரக்தியில் தந்தை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கண்டித்தும் கேட்காமல் காதலனுடன் சென்ற மகள்; விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட தந்தை!

சென்னையில் காதலனுடன் மகள் சென்ற விரக்தியில் தந்தை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
தந்தை தற்கொலை

சென்னை கொளத்தூர், கண்ணகி நகர், அண்ணா குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜி என்கிற விஜய் (23). இவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 27.1.2022-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் சொந்த வீட்டில் குடியிருந்துவருகிறேன். நான் கொத்தனார் வேலை செய்துவருகிறேன். எனக்கு இரண்டு தங்கைகள். மூத்த தங்கைக்கு திருமணமாகிவிட்டது. என் இளைய தங்கைக்கு 17 வயதாகிறது. அவள் ப்ளஸ் டூ படித்துவருகிறாள். என்னுடைய அம்மா சித்தாள் வேலை செய்துவருகிறார்.

 தற்கொலை
தற்கொலை
Representational Image

என் இளைய தங்கை எங்கள் பகுதியில் வசிக்கும் குமார் என்பவரைக் காதலித்துவந்தார். அதனால் நாங்கள் அவளைக் கண்டித்தோம். கடந்த 27.1.2022-ம் தேதி காலை 7 மணியளவில் என் தங்கை குமாருடன் சென்றுவிட்டாள். இது குறித்து நாங்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். விரக்தியிலிருந்த என் அப்பா ஐயப்பன் (42), வீட்டின் முதல் மாடியிலுள்ள படுக்யைறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதைப் பார்த்து என்னுடைய அம்மா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு படுக்கையறைக்குச் சென்று பார்த்தபோது என் அப்பா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் என் தந்தையின் சடலத்தை மீட்டு கீழே இறக்கிப் பார்த்தோம். அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. எனவே, என் தந்தையின் சடத்தைக் குலவழக்கம்படி நல்லடக்கம் செய்ய என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ஐயப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஐயப்பனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காதலனுடன் மகள் சென்றதால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில் ஐயப்பனின் குடும்பத்தினர் மகள் மாயம் என கொடுத்த புகாரில் அடிப்படையில் காதலனுடன் சென்ற ப்ளஸ் டூ மாணவியை போலீஸார் தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism