Published:Updated:

ஆற்காடு: காதல் திருமணத்தால் நீடித்த பகை! - மாமனாரை வெட்டிக் கொன்ற வழக்கில் மருமகன் கைது

கொலை

காதல் திருமணம் செய்த தகராறில், தொடர்ந்து தொந்தரவு கொடுத்த மாமனாரை மருமகனே வெட்டிக் கொன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆற்காடு: காதல் திருமணத்தால் நீடித்த பகை! - மாமனாரை வெட்டிக் கொன்ற வழக்கில் மருமகன் கைது

காதல் திருமணம் செய்த தகராறில், தொடர்ந்து தொந்தரவு கொடுத்த மாமனாரை மருமகனே வெட்டிக் கொன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கடப்பந்தாங்கல் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 45 வயதான விவசாயி சசிதரன். இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரின் மூத்த மகள் சினேகாவுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து, நிச்சயம் செய்தனர். திருமணத் தேதியும் குறிக்கப்பட்ட நிலையில், பக்கத்து ஊரான கீரம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தன்னுடைய காதலன் விக்னேஷ்வரனுடன் சினேகா வீட்டிலிருந்து வெளியேறினார். வெளியூரில் தங்கி திருமணம் செய்துகொண்ட இருவரும் சில நாள்கள் கழித்து ஊர் திரும்பியிருக்கிறார்கள்.

மகளின் காதல் திருமணத்தைப் பெற்றோர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. தாங்கள் முடிவு செய்த திருமணம் நின்றுபோனதால், ஊரார் முன்னிலையில் தலைகுனிவு ஏற்பட்டதாக மகள்மீது கோபம்கொண்டனர். இந்தக் கோபம் நாளடைவில் வன்மமாக மாறியதாகச் சொல்லப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட சசிதரன்
கொலைசெய்யப்பட்ட சசிதரன்

இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில், விக்னேஷ்வரனின் தந்தை மணி கை உடைந்து படுகாயமடைந்தார். அது முதல், மாமனார், காதல் திருமணம் செய்த மருமகன் இடையேயான பகை மேலும் முற்றியது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சசிதரன், அவர் மகன் சுரேந்தர் இருவரும் கீரம்பாடி கிராமத்துக்குச் சென்று விக்னேஷ்வரன் வீட்டில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சசிதரன் தனது நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கீரம்பாடி பேருந்து நிறுத்தம் வழியாகச் சென்றபோது, அங்கு நின்றிருந்த விக்னேஷ்வரனின் தந்தை மணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மணி தனது மகனுக்குத் தகவல் தெரிவித்தார். ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன், அவரின் அண்ணன் பசுபதி, பெரியப்பா சௌந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால், அதற்குள் சசிதரன் அங்கிருந்து தனது நிலத்துக்குச் சென்றுவிட்டார். `தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் மாமனாரை இனியும் உயிரோடு விடக் கூடாது’ என்று முடிவுசெய்து, சசிதரனைத் தேடி அவர்கள் சென்றனர்.

கைதுசெய்யப்பட்ட விக்னேஷ்வரன்
கைதுசெய்யப்பட்ட விக்னேஷ்வரன்

கீரம்பாடி சுடுகாடு அருகே மாமனார் சசிதரனை வழிமறித்த விக்னேஷ்வரன் தரப்பினர் கத்தியால் சரமாரியாக அவரை வெட்டிவிட்டுத் தப்பி ஓடியிருக்கிறார்கள். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிதரன் இறந்தார். இது குறித்து, ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, மருமகன் விக்னேஷ்வரன் உட்பட மூன்று பேரைக் கைதுசெய்தனர். தலைமறைவாகப் பதுங்கியிருக்கும் மேலும் இரண்டு பேரையும் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். இந்தச் சம்பவம், ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.