Published:Updated:

நாகை: மகள் காதல் விவகாரம்; மனைவி, பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை!

மரணம்

மூத்த மகள் எதிர்ப்பை மீறி காதலனைத் திருமணம் செய்துகொண்டதால், மன உளைச்சலில் டீக்கடைக்காரர் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை: மகள் காதல் விவகாரம்; மனைவி, பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை!

மூத்த மகள் எதிர்ப்பை மீறி காதலனைத் திருமணம் செய்துகொண்டதால், மன உளைச்சலில் டீக்கடைக்காரர் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மரணம்

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலை அடுத்த புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 55). வீட்டிலேயே டீ மற்றும் டிபன் கடை நடத்திவந்தார். இவர் மனைவி புவனேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள். லட்சுமணனின் மூத்த மகள் நாகையிலுள்ள தனியார் உடல் பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

திருமணம்
திருமணம்
(மாதிரிபடம்)

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கீழத்தெருவில் வசிக்கும் அப்பு என்கிற விமல்ராஜ் என்ற இளைஞரும், லட்சுமணனின் மூத்த மகளும் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தந்தை லட்சுமணன், மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் மகள் விமல்ராஜைத் திருமணம் செய்துகொண்டு அவரோடு அருகிலுள்ள கீழத்தெருவில் தனியாக வாழ்ந்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் மன உளைச்சலில் இருந்துவந்த லட்சுமணன், கடந்த நான்கு தினங்களாக டீக்கடையை திறக்காமல் சோகமாக இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கமாக காலை 7 மணியாகியும் டீக்கடை திறக்காததால் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள், கீழ்வேளூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழ்வேளூர் போலீஸார், வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது நான்கு பேர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அதையடுத்து நாகை எஸ்.பி ஜவஹர் நேரில் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், லட்சுமணன், தன் மனைவியையும் மகள்களையும் குழவிக் கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மரணம்
மரணம்

போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர்.