Published:Updated:

சென்னை: மதுபோதையில் தந்தையைக் கொலை செய்த மகன்! - தாய் கொடுத்த புகாரில் கைது

கொலை
கொலை

சென்னையில் மதுபோதையில் தந்தையைக் கத்தியால் கொலை செய்த மகனை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர், சூளைப்பள்ளம், வெங்கட்ராமன் சாலையைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவரின் மகன் பிரகாஷ். மதுபோதைக்கு அடிமையானவர். அதனால் செல்வத்துக்கும் பிரகாஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. அதனால் மகனைச் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வீட்டைவிட்டு வெளியில் அனுப்பிவிட்டார். அதனால் பிரகாஷ், அதே பகுதியில் தனியாக வசித்துவருகிறார்.

கொலை
கொலை

இந்தநிலையில், 11.9.2021-ம் தேதி பிரகாஷ், தன்னுடைய அம்மாவைப் பார்க்க குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதைப் பார்த்த செல்வம், மகன் பிரகாஷைக் கண்டித்தார். அதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிரகாஷ், கத்தியை எடுத்து செல்வத்தைக் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த செல்வத்தை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சேர்த்தனர். அங்கு செல்வத்தைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சென்னை: கஞ்சியில் விஷம்; கணவனைக் கொலை செய்த மனைவி! -ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

இதையடுத்து செல்வம் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் செல்வத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செல்வத்தின் மனைவி சுமதி, காவல் நிலையத்தில் புகாரளித்தார்

கைது
கைது
representational image
சென்னை: கஞ்சியில் விஷம்; கணவனைக் கொலை செய்த மனைவி! -ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, தந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக சூளைப்பள்ளத்தைச் சேர்ந்த பிரகாஷைக் (20) கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கத்தியையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு பிரகாஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு