Published:Updated:

திண்டுக்கல்: `ஆசிரமம் நடத்த நிலம் வாங்கித் தருகிறேன்!’ - மோசடி வழக்கில் பெண் சாமியார் கைது

சாமியார்
News
சாமியார்

கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் சாமியாரை போலீஸார் திண்டுக்கல்லில் கைதுசெய்தனர்.

திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியில் வசித்து வருபவர் பபிதா என்ற பவித்ரா. இவர், தான் காளி என்றும், தனக்கு காளியின் பரிபூரண அருள் இருப்பதாகவும் கூறி ஆசி வழங்கிவருகிறார். திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் விடுதியில், தான் காளி என்று கூறி, தன்னிடம் ஆசி பெற்றுக்கொள்ளுமாறு விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் பல்வேறு இடங்களில் ஆசி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, மக்களுக்கு அருள்புரிவதாகக் கூறித் தன்னைப் பிரபலப்படுத்திக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம் கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, 5.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 60 சவரன் தங்க நகையைப் பெற்றுள்ளார். இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தவயோகி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பவித்ராவைத் தேடிவந்தனர்.

பவித்ரா
பவித்ரா

ஆறு மாத காலமாகத் தேடப்பட்டு வந்த பவித்ரா, திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா தெருப் பகுதியிலுள்ள அவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக நிலக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குரு வெங்கட், சார்பு ஆய்வாளர் தலைமையில் ஐந்து பேர்கொண்ட தனிப்படையினர் திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா கோயில் தெருவில் அவரின் வீட்டில் தங்கியிருந்த பவித்ரா, அவரின் தங்கை ரூபாவதி இருவரையும் கைதுசெய்து நிலக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர்.

அண்மையில் அன்னப்பூரணி அரசு அம்மா என்ற பெயரில் ஒரு பெண் ஆசி வழங்குவதாகக் கூறி வைரல் ஆனார். இந்நிலையில் திண்டுக்கல்லில் பெண் சாமியார் மோசடி வழக்கில் போலீஸாரால் கைதுசெய்து அழைத்துச் சென்ற விவகாரத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz