Published:Updated:

சென்னை: `எங்ககிட்டேயே பணம் கேக்குறியா?' - 1,000 ரூபாய் டீசலுக்கு நடந்த ரகளை; வலைவீசும் போலீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெட்ரோல் பங்க்கில் டீசல் போடும் அ.தி.மு.க கொடி கட்டிய கார்
பெட்ரோல் பங்க்கில் டீசல் போடும் அ.தி.மு.க கொடி கட்டிய கார்

சென்னை நெசப்பாக்கத்தில் 1,000 ரூபாய்க்கு டீசலை நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற அ.தி.மு.க கொடிகட்டிய காரில் வந்தவர்களை போலீஸார் சிசிடிவி மூலம் தேடிவருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை நெசப்பாக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க்குக்கு கடந்த 21-ம் தேதி அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்த இன்னோவா கார் ஒன்று டீசல் போடுவதற்காக வந்தது. காருக்குள் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 1,000 ரூபாய்க்கு டீசல் நிரப்பியவர்கள், கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கூறியுள்ளனர். ஆனால் கூகுள் பே மூலமாகவும் பணத்தைச் செலுத்தாமல் அவர்கள் புறப்பட தயாராகியிருக்கின்றனர்.

கார்
கார்

அதைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர், பணத்தைக் கொடுக்கும்படி காரில் வந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பணத்தைக் கொடுக்காமல் அவர்கள் காரை எடுத்திருக்கிறார்கள். அதனால் காரை வழிமறித்த பங்க் ஊழியர், பணம் தந்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து காரில் வந்தவர்களுக்கும் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

`இன்டர்நெட் பேக்கிங்கில் நூதன மோசடி; உஷார்..!' - SBI வாடிக்கையாளரின் நேரடி அனுபவம்

அப்போது காரில் வந்தவர்கள், `நாங்கள் யாருன்னு தெரியுமா, எங்ககிட்டேயே பணம் கேக்குறியா?' என்று கூறியதோடு ஆபாசமாகப் பேசியதாகத் தெரிகிறது. பெட்ரோல் பங்க் ஊழியருக்கும், அ.தி.மு.க கொடிகட்டி காரில் வந்தவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைக் கேட்டு அங்கு பெட்ரோல் போட வந்த பொதுமக்களும் பங்க் ஊழியருக்கு ஆதரவாக காரைச் சுற்றி நின்றபடி பேசினர். அதனால் ஆத்திரமடைந்த காரில் வந்தவர்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதுவதைப்போல காரை இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கார்
கார்

பொதுமக்களும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் சிறிது தூரம் காரை விரட்டிச் சென்றனர். ஆனால் கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் பங்க் ஊழியர்கள் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அப்போது சிசிடிவி-யில் பதிவான காட்சிகளும் போலீஸாரிடம் பெட்ரோல் பங்க் தரப்பில் கொடுக்கப்பட்டது. சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் காரின் பதிவு நம்பர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தது என தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு