Published:Updated:

போனி கபூர் கிரெடிட் கார்டை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி - யார் அந்த மர்ம நபர்?!

போனி கபூர்

`வலிமை’ பட தயாரிப்பாளர் போனி கபூரின் கிரெடிட் கார்டை மர்ம நபர்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

போனி கபூர் கிரெடிட் கார்டை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி - யார் அந்த மர்ம நபர்?!

`வலிமை’ பட தயாரிப்பாளர் போனி கபூரின் கிரெடிட் கார்டை மர்ம நபர்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

Published:Updated:
போனி கபூர்

ஆன்லைன் மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதில் முக்கியப் பிரபலங்கள்கூடத் தப்புவதில்லை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளார். போனி கபூரின் கிரெடிட் கார்டை அவருக்குத் தெரியாமலேயே மர்ம நபர்கள் பயன்படுத்தி, பொருள்களை வாங்கியிருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியிலிருந்து போனி கபூருக்கு அழைப்பு வந்தது. அதில் கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்று வங்கி ஊழியர் தெரிவித்தார். அதன் பிறகுதான் கிரெடிட் கார்டு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதே போனி கபூருக்குத் தெரியவந்தது. போனி கபூர் உடனே வங்கியில் இருந்து கிரெடிட் கார்டு பயன்படுத்திய விவரங்களை கேட்டுப் பெற்றபோது ரூ.3.84 லட்சம் அளவுக்கு போனி கபூர் கிரெடிட் கார்டிலிருந்து செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

போனி கபூர்
போனி கபூர்

மொத்தம் ஐந்து பரிவர்த்தனைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. இது குறித்து போனி கபூரின் உதவியாளர், மும்பை அந்தேரி அம்போலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து அம்போலி போலீஸ் அதிகாரி கூறுகையில், ``மோசடிப் பேர்வழிகள் வங்கியிலிருந்து அனுப்புவது போன்று இமெயில் அல்லது மெசேஜ் அனுப்பி கிரெடிட் கார்டு பின் நம்பரை பெற்றிருக்கவேண்டும். அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியபோது ஸ்கிம்மர் கருவிகளைப் பயன்படுத்தி பின் நம்பரை திருடியிருக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

கிரெடிட் கார்டில் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்திய ஐபி ஐடி-யைப் பயன்படுத்தி விசாரணை நடத்திவருகின்றனர். சைபர் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காக மும்பையில் ஐந்து சைபர் போலீஸ் நிலையங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism