Published:Updated:

குவைத்தில் கிரிமினல் குற்றம்; மீண்டும் செல்ல கைரேகை மாற்று அறுவை சிகிச்சை - தெலங்கானாவில் அதிர்ச்சி

தெலங்கானா காவல்துறை

இடைப்பட்ட காலகட்டத்தில் அவர்கள் தங்கள் ஆதார் எண் முதல் வீட்டு முகவரி வரையான விவரங்களை மாற்றி, பிறகு குவைத் செல்ல விசாவுக்காக விண்ணப்பிப்பார்கள் என்று கூடுதல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குவைத்தில் கிரிமினல் குற்றம்; மீண்டும் செல்ல கைரேகை மாற்று அறுவை சிகிச்சை - தெலங்கானாவில் அதிர்ச்சி

இடைப்பட்ட காலகட்டத்தில் அவர்கள் தங்கள் ஆதார் எண் முதல் வீட்டு முகவரி வரையான விவரங்களை மாற்றி, பிறகு குவைத் செல்ல விசாவுக்காக விண்ணப்பிப்பார்கள் என்று கூடுதல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Published:Updated:
தெலங்கானா காவல்துறை

குற்ற விசாரணைகளின்போது கைரேகைகளை சாட்சியமாகப் பயன்படுத்தி, வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்விதமாக ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்தேறியுள்ளது.

தெலங்கானா காவல்துறை சட்ட விரோதமாக கைரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்த இரண்டு பேரைக் கைதுசெய்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை (29/8/22) அன்று, கட்கேசர் காவல்துறையுடன் மல்கஜ்கிரி மண்டலத்துக்குட்பட்ட சிறப்பு நடவடிக்கைக்குழு சேர்ந்து நடத்திய கூட்டு ஆபரேஷனில் கஜ்ஜலோகொண்டுகாரி நாக முனீஸ்வர் ரெட்டி(Gajjalakondugari Naga Muneswar Reddy), சகபாலா வெங்கட் ராமன் (Sagabala Venkat Raman), போவில்லா சிவசங்கர் ரெட்டி (Bovilla Shiva Shankar Reddy), ரெண்ட்லா ராமகிருஷ்ண ரெட்டி (Rendla Rama Krishna Reddy) ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர். விசாரணையில் கஜ்ஜலோகொண்டுகாரி நாக முனீஸ்வர் ரெட்டி, YSR கடப்பாவில் உள்ள கிருஷ்ணா டயகனாஸ்டிக்சில் கதிர்வீச்சு மற்றும் எக்ஸ்ரே நிபுணராகப் பணியாற்றுகிறார்.

குவைத்தில் கிரிமினல் குற்றம்; மீண்டும் செல்ல கைரேகை மாற்று அறுவை சிகிச்சை - தெலங்கானாவில் அதிர்ச்சி

சகபாலா வெங்கட் ராமன் திருப்பதியிலுள்ள DBR மருத்துவமனையில் மயக்கமருந்து நிபுணராகப் பணியாற்றுகிறார். இவர்கள் கட்கேசர் பகுதியில் உள்ள பலருக்கு சட்டவிரோதமான கைரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்ய கடப்பாவிலிருந்து வந்து ஹைதராபாத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டவிரோதமாக கைரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒரு நபருக்கு ரூ. 25,000/- என வசூல் செய்துள்ளனர். போவில்லா சிவசங்கர் ரெட்டி மற்றும் ரண்ட்லா ராமகிருஷ்ண ரெட்டி ஆகியோர் குவைத்தில் கட்டுமான வேலை செய்துவந்துள்ளனர். பின்னர், குவைத் அதிகாரிகளிடம் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டதால், குவைத் அரசாங்கம் இவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

மேலும் நடைப்பெற்ற போலீஸ் விசாரணையில் சிவசங்கர் ரெட்டி மற்றும் ரண்ட்லா ராமகிருஷ்ண ரெட்டி ஆகியோர் மீண்டும் குவைத் செல்ல, சட்டவிரோதமாகக் கைரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்யவே கஜ்ஜலோகொண்டுகாரி மற்றும் சகபாலா ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் இதுவரை ராஜஸ்தான் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த 11 பேருக்கு சட்டவிரோதமாக கைரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கைரேகை மாற்ற முதலில், விரல்நுனியின் மேல் தோலை அகற்றி அதை மீண்டும் தைப்பர்.

குவைத்தில் கிரிமினல் குற்றம்; மீண்டும் செல்ல கைரேகை மாற்று அறுவை சிகிச்சை - தெலங்கானாவில் அதிர்ச்சி

இதனால் ஏற்படும் காயம் ஆற 1-2 மாதங்கள் ஆகும். கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை கைரேகை சற்று மாற்றமாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் தங்கள் ஆதார் எண் முதல் வீட்டு முகவரி வரையான விவரங்களை மாற்றி, பின் குவைத் செல்ல விசாவுக்காக விண்ணப்பிப்பார்கள் என்று கூடுதல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தெலங்கானா போலீஸார் அவர்கள் நான்கு பேரை கைதுசெய்ததோடு, அறுவை சிகிச்சை செய்யக் கொண்டுவந்த மருத்துவப் பொருள்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் உபகரணங்கள் அடங்கிய பையைக் கைப்பற்றியுள்ளனர்.