Published:Updated:

இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு; பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு!

பாபா ராம்தேவ்
News
பாபா ராம்தேவ்

``இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கிறது." - பாபா ராம்தேவ்

Published:Updated:

இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு; பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு!

``இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கிறது." - பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்
News
பாபா ராம்தேவ்

கடந்த நவம்பரில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பாபா ராம்தேவ், மாநில துணை முதல்வரின் மனைவி அருகிலிருக்கும்போதே பெண்கள் குறித்து இழிவாகப் பேசி கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

இந்த நிலையில், தற்போது இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், மத உணர்வைத் தூண்டி பகைமையை ஊக்குவிப்பதாகப் பாபா ராம்தேவ் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

அதாவது பிப்ரவரி 2-ம் தேதி, ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாபா ராம்தேவ், ``இஸ்லாமியர்கள் எல்லாவிதமான பாவங்களையும் செய்கிறார்கள். அதோடு, இஸ்லாமியர்கள் ஒருநாளைக்கு ஐந்து வேளை தொழுவார்கள். அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

நம் இஸ்லாமிய சகோதரர்கள் இது போன்று பலவற்றில் ஈடுபடுகின்றனர். ஆனால், அவர்கள் தங்களுக்குக் கற்பித்தபடி நமாஸும் செய்கிறார்கள். இந்து மதம் அப்படியல்ல. இங்கு யாரையும் நான் விமர்சிக்கவில்லை, இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சிலர் உலகம் முழுவதையும் தங்கள் மதமாக மாற்றுவதில் வெறித்தனமாக இருக்கின்றனர்'' என்று கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

அதைத்தொடர்ந்து பத்தாய் கான் என்பவர் பர்ஹாய் சௌஹாதன் காவல் நிலையத்தில், முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகப் பாபா ராம்தேவ் மீது புகாரளித்தார். அதையடுத்து, பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

பின்னர் இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரி பூதாரம், ``பகைமையை ஊக்குவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல் போன்றவற்றின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153 ஏ, 295 ஏ, 298 ஆகியவற்றின் கீழ் பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.