Published:Updated:

`நிர்வாணப்படுத்தி, ஆடும்படி கட்டாயப்படுத்திய சீனியர்கள்’ - ஒடிசாவை கலங்கடிக்கும் ராகிங்!

கலிலுல்லா.ச

சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்துள்ளனர். இது தொர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Students
Students ( ANI )

உச்ச நீதிமன்றம் 2009-ம் ஆண்டு ராகிங் கொடுமை, `மனித உரிமை துஷ்பியோகம்’ என்று குறிபிட்டுள்ளது. பல ஆண்டுகளாக `ராகிங்’ கொடுமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கென கல்லூரிகளில் தனி கமிட்டி அமைத்து கண்காணித்தும் வருகின்றனர். இருந்தபோதிலும் ராகிங் கொடுமைகள் குறைந்தபாடில்லை.

ragging
ragging
ANI

இந்நிலையில் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் டெக்னிக்கல் யுனிவர்சிட்டி இயங்கி வருகிறது. அந்த யுனிவர்சிட்டியைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்துள்ளனர். இது தொர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஒடிசா அரசின் நிதியுதவியுடன் இயங்கி வருகிறது வீர் சுரேந்தர் சாய் டெக்னிக்கல் யுனிவர்சிட்டி. அந்த முதல் வீடியோவில் முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று திரண்டு மேடை மீது ஏறி நடனமாடுகின்றனர். அவர்கள் உடம்பில் உள்ளாடையைத்தவிர வேறெதுவும் இல்லை.

சீனியர்களின் கட்டாயத்தின் பேரில் வற்புறுத்தப்பட்டு இந்த ராகிங் கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநில திறன்மேம்பாடு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பிரேமானந்த் நாயக், ஆன்லைனில் உலாவரும் இந்த வீடியோ தொடர்பான உண்மைநிலையை அறிய விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக 10 மாணவர்களை டி-பார் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி உடனிருந்த 52 மாணவர்களுக்கு ஆளுக்கு 2,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

students ragging
students ragging
ANI

இந்தப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது முதன்முறையல்ல. கடந்த வருடம் இதேபோல ஒரு புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக நான்காம் ஆண்டு மாணவன் ஒருவன் 1 வருடம் இடைநீக்கம் செய்யபட்டு, உடனிருந்த மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 150 மாணவர்களுக்கு சீனியர்கள் மொட்டையடிக்கச்சொல்லி சல்யூட் அடிக்க வைத்து ராகிங் செய்தது குறிபிடத்தக்கது.