Published:Updated:

மீனவப் பெண் எரித்துக் கொலை: வடமாநில வாலிபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?!

கொலை - விசாரணை

ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மீனவப் பெண் எரித்துக் கொலை: வடமாநில வாலிபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?!

ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை - விசாரணை

ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் மீன்பிடித் தொழி்லை பிரதானமாகச் செய்துவருவதோடு, பெண்களும் கடலுக்குச் சென்று கடல்பாசி சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைவைத்து தங்களுடைய குடும்பத்தை நடத்திவருகின்றனர்.

இந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது (45). இவர் கணவர் மீன்பிடித் தொழில் செய்துவருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். கணவர் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுவிடுவதால், வீட்டிலிருந்த சந்திரா, குடும்ப வறுமையைப் போக்குவதற்காகக் கடல்பாசி எடுக்கும் தொழிலுக்குச் சென்றுவந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கதறி அழும் சந்திராவின் உறவினர்கள்
கதறி அழும் சந்திராவின் உறவினர்கள்

நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிக்கச் சென்றபோது அந்தப் பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் மீனாவைக் கேலி, கிண்டல் செய்ததாகவும், அவர்களைப் பண்ணைப் பணியாளர்கள் முன் மீனா கடுமையாகத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மீனாவின் கணவர், அவர் உறவினர்கள் கடற்கரை ஓரங்களில் தீவிரமாகத் தேடிப் பார்த்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நள்ளிரவு சம்பவ இடத்தில் எஸ்.பி கார்த்திக் விசாரணை
நள்ளிரவு சம்பவ இடத்தில் எஸ்.பி கார்த்திக் விசாரணை

பின்னர் ராமேஸ்வரம் நகர் போலீஸில் புகாரளித்து, அவர்கள் உதவியுடன் இரவு முழுவதும் தேடினர். அப்போது வடகாடு கடற்கரையோர காட்டுப்பகுதியில் மீனாவின் சாப்பாட்டு பாத்திரம், கடல்பாசி சேகரிக்கக் கொண்டு சென்ற கண்ணாடி, அவரின் புடவை, துணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்திருக்கின்றன. தொடர்ந்து காட்டுப்பகுதியில் தீவிரமாகத் தேடியபோது முக்கால்வாசி எரிக்கப்பட்டு நிர்வாணநிலையில் மீனா பிணமாகக் கிடந்திருக்கிறார்.

இதையடுத்து மீனாவுடன் கடல்பாசி எடுக்கச் செல்லும் மீனவப் பெண்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, நேற்று முன்தினம் இறால் பண்ணையில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் மீனாவை கேலி, கிண்டல் செய்ததாகவும், அவர்களை மீனா சத்தம் போட்டது குறித்தும் தெரிவித்தனர்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த மீனாவின் உறவினர்கள், மீனவ கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நள்ளிரவு இறால் பண்ணைக்குச் சென்று பண்ணையை அடித்து நொறுக்கியதுடன், அந்த ஆறு வடமாநில இளைஞர்கள்தான் சந்திராவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகப்பட்டு ஆறு பேரையும் சரமாரியாகத் தாக்கினர். மேலும், அவர்கள் பயன்படுத்திவந்த மோட்டார் சைக்கிளையும் தீவைத்து எரித்தனர்.

கிராம மக்களால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர்கள்
கிராம மக்களால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர்கள்

கிராம மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ராமேஸ்வரம் போலீஸார், இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்குக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி 100-க்கும் மேற்பட்ட போலீஸார், துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினருடன் நள்ளிரவு அங்குவந்த எஸ்.பி கார்த்திக், கிராம மக்களிடமிருந்து வடமாநில இளைஞர்கள் ஆறு பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்‌.

தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்‌.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் கிராமத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் கிராமத்தினர்

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது, ``சந்தேகத்தின் அடிப்படையில் இந்த ஆறு வடமாநில இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்திவருகிறோம். இவர்கள்தான் குற்றவாளிகளா... மீனா கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுதான் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்" என்றார்.

மீனவப் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்த கிராமம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism