Published:Updated:

ராணுவத்தில் பணி, 4 மாத சம்பளமும் வந்தது; ஆனால்... நூதன மோசடி! - ராணுவ வீரரைத் தேடும் போலீஸ்

ராணுவ வீரர்கள் ( ட்விட்டர் )

8 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு, ராணுவத்தில் சேர்த்துவிட்டதாக நம்பவைத்து, நான்கு மாத சம்பளத்தையும் வழங்கி ஏமாற்றிய ராணுவ வீரரைக் காவல்துறை தேடிவருகிறது.

ராணுவத்தில் பணி, 4 மாத சம்பளமும் வந்தது; ஆனால்... நூதன மோசடி! - ராணுவ வீரரைத் தேடும் போலீஸ்

8 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு, ராணுவத்தில் சேர்த்துவிட்டதாக நம்பவைத்து, நான்கு மாத சம்பளத்தையும் வழங்கி ஏமாற்றிய ராணுவ வீரரைக் காவல்துறை தேடிவருகிறது.

Published:Updated:
ராணுவ வீரர்கள் ( ட்விட்டர் )

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர் கடந்த 2019-ம் ஆண்டு ராணுவத்தில் இணைய, ராணுவ ஆட்சேர்ப்பு முகாமுக்குச் சென்றிருக்கிறார். அங்கு ராகுல் சிங் என்ற நபர் அறிமுகமாகியிருக்கிறார். இந்த முகாமில் மனோஜ் குமார் தேர்வாகவில்லை. ஆனால், ராகுல் சிங் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்த நிலையில், இருவருக்குமான தொடர்பு தொடர்ந்திருக்கிறது.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, மனோஜ் குமாரிடம், "ராணுவத்தில் எனக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது, உன்னையும் ராணுவத்தில் சேர்த்துவிட முடியும், ஆனால், அதற்கு 8 லட்சம் ரூபாய் வரை பணம் தேவைப்படும். எனவே, பணத்தைத் தயார் செய்துகொண்டு என்னிடம் வா வேலை வாங்கித் தருகிறேன்" என ராகுல் சிங் தெரிவித்திருக்கிறார். அதை நம்பிய மனோஜ் குமார் 8 லட்சம் ரூபாயை ராகுல் சிங்கிடம் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, உடல் பரிசோதனைக்கு வர வேண்டும் எனக் கூறி மனோஜ் குமாரை வரவைத்த ராகுல் சிங், உயரதிகாரி தோற்றத்தில் பிட்டு என்ற நபரை நடிக்கவைத்து மனோஜ் குமாரை நம்பவைத்திருக்கிறார்.

அந்தச் சோதனையில், உடற்பயிற்சி சோதனைகள் செய்வதுபோல இருவரும் நடித்திருக்கிறார்கள். மேலும், அதில் மனோஜ் குமார் தேர்வாகிவிட்டதாகவும், அவருக்குப் பணி நியமன ஆணை, அடையாள அட்டை, ராணுவ உடை, துப்பாக்கி எனச் சகலமும் வழங்கி, பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் பகுதிக்கு அருகில் ராணுவப் பாதுகாவலராக நிற்கவைத்திருக்கிறார்கள். மேலும், அவருக்கு கடந்த நான்கு மாதங்களாக ரூ.12,500 சம்பளமும் வழங்கியிருக்கிறார்கள்.

ராணுவம்
ராணுவம்

இந்த நிலையில், கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக ராகுல் சிங் ராணுவத்திலிருந்து விலகினார். இதற்கிடையில், மனோஜ் குமாருக்கு முகாமில் இருக்கும் உண்மையான ராணுவ வீரர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகே மனோஜ் குமாரின் அடையாள அட்டை முதல் அனைத்து ஆவணங்களும் போலி எனத் தெரியவந்திருக்கிறது. உடனே, ராணுவ வீரர்கள் மனோஜ் குமார் தொடர்பான தகவலை உயரதிகாரிகளுக்கு தெரிவித்து விசாரித்ததில், அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது.

அதன் பிறகு மனோஜ் குமார் மீண்டும் உத்தரப்பிரதேசத்துக்கே அனுப்பப்பட்டார். ராகுல் சிங், பிட்டு உள்ளிட்டவர்கள்மீது வழக்கு மோசடி வழக்கு பதியப்பட்டு, பிட்டு, அவர்களுக்கு உதவியாக இருந்த ராஜா சிங் ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறது. முக்கியக் குற்றவாளியான ராகுல் சிங் தலைமறைவாகியிருக்கிறார். காவல்துறை அவரையும் தேடிவருகிறது.

காவல்துறை
காவல்துறை

நாட்டைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பான ராணுவத்தில் சேருவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமா... ராணுவத்தில் சேர்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் பல இளைஞர்கள் இந்த நாட்டின் தொடர்கதையாகிவருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.