Published:Updated:

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் விரித்த வலை; வெளியுறவு அமைச்சகத்தின் வாகன ஓட்டுநர் டெல்லியில் கைது!

பெண் உளவு

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய வெளியுறவுதுறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்படுவதாக உயரதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் இது தொடர்பாகக் கண்காணித்து வந்திருக்கின்றனர். டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று (18-11-22) டெல்லி தலைமையகத்தில் வைத்து, அந்த ஓட்டுநரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்
ட்விட்டர்

அந்த ஓட்டுநர், பூனம் ஷர்மா (பூஜா) என்ற, இந்தியப் பெண்ணாக நடித்த பாகிஸ்தான் நாடடுப் பெண் ஒருவருக்கு, பணத்துக்கு பதிலாக முக்கியத் தகவல் (ஆவணங்களை) பரிமாறிக்கொண்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ-யின், ஹனி-டிராப் வலையில் இந்த வாகன ஓட்டுநர் சிக்கியிருந்தார். மேலும், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.