Published:Updated:

`கப்பலில் எண்ணெய் வரும்..!’ தேனி நபரிடம் ரூ.60 லட்சம் மோசடி! - சிக்கிய வெளிநாட்டு இளைஞர்

கைதுசெய்யப்பட்டவர்
News
கைதுசெய்யப்பட்டவர்

தேனியில் எண்ணெய் ஆலை அதிபரிடம் எண்ணெய் விற்பனை செய்தவதாகக் கூறி 60 லட்சம் மோசடி செய்த ஐவரி நாட்டைச் சேர்ந்த இளைஞரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைதுசெய்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் அதிர்ஷ்ட ராஜா (37). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர் சொந்தமாக பொன்மணம் என்ற எண்ணெய் ஆலை வைத்திருக்கிறார். தனியார் நிறுவன பாமாயில் எண்ணெய் விநியோகஸ்தராகவும் இருந்துவருகிறார். இந்த நிலையில் இவர் பாமாயிலைச் சொந்த பிராண்டில் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக இரண்டு இணையதள முகவரிகளில் தனது சுயவிவரங்களைப் பதிவுசெய்திருந்தார். மேலும் அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது 5 மெட்ரிக் டன் அளவுக்கு ஒப்பந்தம் தயார் செய்து அனுப்புமாறு அதிர்ஷ்ட ராஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், அதிர்ஷ்ட ராஜா முதற்கட்டமாக 1,40,000 ரூபாய் பணம் அனுப்பிவைத்துள்ளார். பின்னர் கொரோனா காலம் என்பதால் கப்பல் மூலமாகவே எண்ணெய் அனுப்பப்படும். குறைந்தது 50 மெட்ரிக் டன் அளவுக்கு ஆர்டர் செய்ய வேண்டும் என மெயில் வந்துள்ளது. இதனைக் கண்ட அதிர்ஷ்ட ராஜா 75 மெட்ரிக் டன் எண்ணெய் ஆர்டர் செய்து 7,00,000 ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். அடுத்தபடியாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்குப் பணம் வழங்க வேண்டும் எனவும், நிறுவன மேலாளர் மாறியதால் கூடுதல் பணம் வேண்டும் எனவும் கேட்கப்பட, படிப்படியாக மொத்தம் 60,45,000 ரூபாயை இரண்டு மாதங்களில் அனுப்பியிருக்கிறார் அதிர்ஷ்ட ராஜா. அதற்கு அடுத்தபடியாக எந்த ஒரு இ-மெயிலும் வரவில்லை; எண்ணெயும் வரவில்லை.

கைது
கைது

இதன் காரணமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டுவந்த சைபர் க்ரைம் போலீஸாரிடம் அதிர்ஷ்ட ராஜா புகார் அளித்தார். அதிர்ஷ்ட ராஜாவின் இ-மெயிலுக்கு வந்த தகவலைக்கொண்டு விசாரணை தொடங்கப்பட்டு சைபர் க்ரைம் ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையிலான போலீஸார், டெல்லி சென்று ஐவரி நாட்டைச் சேர்ந்த கோமே ஆர்தர் சில்வஸ்டர் என்ற இளைஞரைக் கைதுசெய்தனர். இதையடுத்து அவரை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை சைதாபேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz