Published:Updated:

சென்னை: `ஆசிட் பாட்டில்; கழிவறையில் வாந்தி' - தடய அறிவியல் துறை பெண் அதிகாரி தற்கொலை?

தடய அறிவியல் துறையில் பணியாற்றிய பெண் தற்கொலை
தடய அறிவியல் துறையில் பணியாற்றிய பெண் தற்கொலை

சென்னை வடபழனியில் குடியிருந்த தடய அறிவியல் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி கருமாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன். இவர் வடபழனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,`` எனக்கும் யுவராணிக்கும் 1999-ல் திருமணம் நடந்தது. நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். என் மனைவி எம்.எஸ்ஸி, எம்.பில் படித்துள்ளார். 2005-ம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள தடய அறிவியல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். எங்களுக்கு 21 வயதில் மகள் உள்ளார். அவர் தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்துவருகிறார்.

எப்.ஐ.ஆர்
எப்.ஐ.ஆர்

கடந்த 1.8.2020-ல் காலை 9 மணியளவில் நான் கண்விழித்தபோது பாத்ரூமில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டியிலிருந்தது. பிறகு, கதவை வேகமாகத் தள்ளிப் பார்த்தபோது என் மனைவி வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். அவள் அருகில் பாத்ரூமை கழுவ பயன்படுத்தப்படும் ஆசிட் பாட்டில்கள் திறந்திருந்தன. அதை அவர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என்று எண்ணி உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

முதல் உதவிக்குப் பிறகு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு சிகிச்சைப் பலனின்றி 2.8.2020-ல் யுவராணி இறந்துவிட்டார். என் மனைவி சடலத்தை இறுதிச் சடங்கு செய்ய என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் புகாரின் பேரில் எஸ்.ஐ சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். யுவராணியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடய அறிவியல் துறை
தடய அறிவியல் துறை
சென்னை: வாடகை பிரச்னை; இன்ஸ்பெக்டர் அடித்தார்! - தீக்குளித்துவிட்டு நடுரோட்டில் ஓடிய பெயின்டர்

போலீஸார் நடத்திய விசாரணையில் யுவராணி, உடல் பருமனால் மனவேதனையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அதுதொடர்பாக எந்தவித ஆதாரமும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. யுவராணி தற்கொலை குறித்து அவரின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அப்போது யுவராணியின் உடல் பருமன் குறித்து போலீஸார் விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தடய அறிவியல் துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு