Published:Updated:

`கொடுக்கல் வாங்கல் தகராறு; பழிக்குப் பழி!'- டீ குடிக்க வந்த அ.தி.மு.க பிரமுகருக்கு நேர்ந்த சோகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கொலை
அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கொலை ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை களமாவூரில் டீ குடித்துக்கொண்டிருந்த அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தியை, டூவீலரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே களமாவூர் சத்திரத்தைச் சேர்ந்தவர் அ.தி.மு.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் மூர்த்தி (52) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் களமாவூர் பகுதியில் உள்ள டீக்கடையில் காலையில் எப்போதும் டீ குடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல் அங்கு டீக்குடித்துக்கொண்டிருந்த போது, மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் மூர்த்தியைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியது. இதில், பலத்த காயமடைந்த மூர்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கொலை
அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கொலை

இதுபற்றித் தகவல் அறிந்த கீரனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கீரனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை அருகே காரப்பட்டைச் சேர்ந்த வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்துவையும், கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக மூர்த்தி தரப்பினர் கடந்த வருடம் பிப்ரவரியில் வெட்டிக்கொலை செய்தனர். கொலை நடந்து ஓராண்டுக்காலம் ஆகாத நிலையில், வீராச்சாமி மற்றும் முத்து கொலைச் சம்பவத்துக்குப் பழிக்குப் பழியாக இந்தக் கொலைச் சம்பவத்தைச் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, "வீராச்சாமி மற்றும் மூர்த்தி இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தனர். இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. குறிப்பாக, வீராச்சாமி, மூர்த்தியிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதைத் திருப்பிக் கேட்டபோதுதான், மூர்த்தி தனது தோட்டத்திற்கு வந்தால் பணம் தருவதாகக் கூறி வீராச்சாமி, வீராச்சாமியின் மகன் முத்துவையும் நம்ப வைத்து வரவழைத்து பணத்தைக் கொடுக்காமல் இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

murder
murder
representational image

இது தொடர்பாக மூர்த்தி மற்றும் அவரது தரப்பினர் கைது செய்யப்பட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்த மூர்த்தியை, தற்போது வீராச்சாமி தரப்பினர் குறிப்பாக வீராச்சாமியின் மருமகன்கள் பழிக்குப் பழியாக இக்கொலைச் சம்பவத்தை கூலிப்படையை வைத்துச் செய்திருக்கலாம். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பின்பே குற்றவாளிகள் குறித்து தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு